வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு விசேட வேலைத்திட்டம்...
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு விசேட வேலைத்திட்டம்...
வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு விசேட வேலைத்திட்டம்...
விசா அனுமதிபெற்று, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல தயாராக உள்ளவர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தாம் செல்ல வேண்டிய நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி வகையை செலுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதேவேளை , சினோபாம் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களை தமது நாடுகளுக்கு அனுமதிக்காதிருக்க மத்திய கிழக்கின் சில நாடுகள் தீர்மானித்துள்ளன.
மேலும் ,இதனால் குறித்த நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை தமக்கு வழங்குமாறு, அந்நாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள் அண்மையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கோரிக்கையொன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.