கொழும்பு செல்வந்தர் வீடுகளில் பணியாளர்களாக சிறார்கள்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கொழும்பிலுள்ள சில செல்வந்தர்களின் வீடுகளில் பணியாளர்களாக சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
எதிர்வரும் தினங்களில் இவ்வாறான வீடுகளை சோதனைக்கு உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த வித்தானபத்திரண தெரிவிக்கின்றார். இவ்வாறு சிறார்களை வேலை அமர்த்தியுள்ள வீடுகளின் உரிமையாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அதேவேளை , தீ காயங்களுடன் பணிப் பெண்ணாக கடமையாற்றிய சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் திருப்தி கொள்ள முடியாது என அவர் கூறுகின்றார்.
மேலும் ,இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு எழுத்துமூலம் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த வித்தானபத்திரண தெரிவிக்கின்றார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.