நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் புதிய எச்சரிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் புதிய எச்சரிக்கை. 


திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் பிற நிகழ்வுகள் இன்று முதல் (24) பொதுச் சுகாதார ஆய்வாளர்களால் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறினால், அதற்காக நிகழ்வு அமைப்பாளர்கள் மற்றும் நிகழ்வு மண்டப உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சங்கம் எச்சரிக்கின்றது. 

மண்டபத்தில் 25% க்கு அதிகமாக கூட்டம் இருக்கக்கூடாது என்ற விதிமுறைக்கினங்கவே திருமணங்களையும் பிற செயல்பாடுகளையும் நடத்த நாங்கள் அனுமதி அளித்தோம். 

இருப்பினும், சுகாதார ஆலோசனையை மீறி பல திருமணங்கள் நடத்தப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்களுடன் அறிக்கைகள் உள்ளன. அத்தகைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பொது சுகாதார ஆய்வாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று சங்கம் தெரிவித்துள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.