நீரில் மூழ்கிய கொழும்பின் சில வீதிகள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


நீரில் மூழ்கிய கொழும்பின் சில வீதிகள். 

நாட்டில் இன்று அதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையின் காரணமாக கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 அதன்படி பொரளை கின்ஸி வீதி, தும்முல்ல சந்தி மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அவ்வீதிகள் ஊடான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 எனவே குறித்த பகுதிகள் ஊடாக பயணிக்கும் வாகனசாரதிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் கிழக்கு மற்றும் பல பகுதிகளிலும் பரவலாக தற்போது அடைமழை பெய்து வருவதாக எமது ஸ்டார் லங்கா செய்தியாளர்கள் தெரிவித்தனர். 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.