மகளின் சடலத்தை தோண்டி எடுங்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


மகளின் சடலத்தை தோண்டி எடுங்கள். 

தன்னுடைய மகளின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் இன்னுமே தீர்க்கப்படவில்லையென தெரிவித்த டயகம சிறுமியான ஹிஷாலியின் தாய் ரஞ்ஜனி, மகளின் சடலத்தை தோண்டியெடுத்து மீளவும் பரிசோதனை செய்யுமாறு ​மன்றாடினார். 

ஐக்கிய மக்கள் சக்தியினால், ஹிஷாலியின் பெற்றோர் கொழும்புக்கு இன்று (26) அழைத்துவரப்பட்டனர். அவர்கள், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றையும் செய்தனர்.

 அதன்பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். ரிஷாட் பதியுதீனின் வீட்டிலிருக்கும் சமையலறைக்கு பின்புறத்தில், மின்சாரம் இல்லாத நாய் கூட்டை போன்றதோர் இடத்திலேயே தனது மகள் தங்க வைக்கப்பட்டிருந்துள்ளார். 

எனது மகளுக்கு என்னமோ நடந்துள்ளது. அவள் சாகவில்லை, கொன்றுவிட்டனர். ஆகையால், சடலத்தை ​மீண்டும் தோண்டியெடுத்து, மரண பரிசோ​தனை செய்யுங்கள் என மன்றாடினார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.