ஓகஸ்ட் 9 முதல் வெளிநாட்டவர்களும் உம்ரா செய்ய அனுமதி.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
ஓகஸ்ட் 9 ஆம் திகதி முதல் (01, முஹர்ரம் 1443) வெளிநாட்டவர்களும் உம்ரா செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சவூதி அரேபியா அரசாங்கம் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
09 நாடுகளைத் தவிர்ந்த ஏனைய நாடுகளில் இருந்து நேரடியாக விமானங்கள் அனுமதிக்கப்படும். அந்த 09 நாடுகள்: இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, ஆர்ஜன்டீனா, ப்ரேசில், தென் ஆபிரிக்கா மற்றும் லெபனான்.
இந்த நாட்டைச் சேர்ந்த யாத்திரிகர்கள் மூன்றாம் நாடொன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலைப் பூர்த்தி செய்த பின்னர் அங்கிருந்து உம்ராவுக்காக பயணிக்க முடியும். பயணிகள் கொரோனாவுக்கெதிராக தடுப்பூசிகளைப் பெற்றிருக்க வேண்டும். Pfizer, Moderna, AstraZeneca மற்றும் Johnson & Johnson தடுப்பூசிகளைப் பூரணமாகப் பெற்றவர்கள் அல்லது சீன வக்சீன்களின் இரண்டு doseகளைப் பெற்றதன் பின்னர் booster dose ஆக Pfizer, Moderna, AstraZeneca மற்றும் Johnson & Johnson தடுப்பூசி வகைகளில் ஏதாவதொன்றை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
18 வயது அல்லது அதற்கு அதிக வயதுடையோர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்றா அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட உம்றா முகவரின் ஊடாகவே பயணிக்க வேண்டும்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.