ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த 11 சிறுமிகளிடம் இன்று விசாரணை.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இதற்கு முன்னர் பணிக்கமர்த்தப்பட்ட சிறுமிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது. அதன்படி ,ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் மரணித்த ஹிஷாலினியை ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற தரகரால் முன்னதாக பல சந்தர்ப்பங்களில் 11 சிறுமிகள் பணிக்கு அமர்த்தப்பட்டமை குறித்து நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிலையில், ஹிஷாலினியின் மரணம் குறித்து ஆராயும் பொலிஸ் குழு இன்று (27) டயகம பகுதியில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. அதற்காக அந்த பொலிஸ் குழு நேற்று மாலை கொழும்பில் இருந்து டயகம பகுதிக்கு சென்றுள்ளது.
மேலும் இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த ஏனைய சிறுமிகளிடம் குறித்த குழு வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.