இன்றைய மருத்துவ குறிப்பு. தூங்கும் முன் குளிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
நமது உடலின் ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் தினமும் குளிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். காலையில் குளித்து விட்டு வெளியில் சென்றால்தான் அந்த நாள் முழுவதும் உற்சாகமாகவும், புத்துணர்வோடும் இருப்போம். காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் உடலில் பல நல்ல மாற்றங்களை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது உங்களின் தூக்கத்தின் தரத்தையும், சுகாதாரத்தையும் மட்டும் உயர்த்தாமல் உளவியல் ரீதியாகவும் பல நன்மைகளை வழங்குகிறது. நாள் முழுவதும் வெளியில் அலைந்துவிட்டு இரவு நேரத்தில் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையுடன் அப்படியே சென்று தூங்கும்போது அது உங்கள் முகத்தில் பருக்களை உண்டாக்கலாம். எனவே இரவு தூங்கும்முன் குளிப்பது முகப்பருக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். பருவக்காலத்திற்கு ஏற்றார் போல அலர்ஜிகள் ஏற்பட்டால் வெளியில் நீங்கள் செல்லும்போது கிருமிகள் உங்கள் சருமம் மற்றும் உடையின் மூலம் உங்களை தொற்றிக் கொள்ளும். இந்த சூழ்நிலையில் நீங்கள் இரவில் குளிக்காமல் தூங்கினால் உங்கள் உடலில் இருக்கும் கிருமிகள் அலர்ஜியின் தாக்கத்தை அதிகரிக்கும். மேலும் இது தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். உங்கள் சருமம் சீராக இருக்க ஹார்மோன்களின் உற்பத்தி சீராக இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் உடலுறவில் ஈடுபடும் போது வெளிப்படும் ஹார்மோனும் சருமத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். இந்த இரண்டு ஹார்மோன்களின் உற்பத்தியும் இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும். எனவே இரவு நேரத்தில் குளிப்பது உங்கள் உடலின் மேற்புறத்தில் இருக்கும் ஹார்மோன்களை சுத்தம் செய்வதன் மூலம் ஹார்மோன்களின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள முடியும். இரவில் குளிப்பதால் அதிக பலனடைவது உங்கள் முடிதான். இது உங்கள் முடியில் ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ள உதவுகிறது. மேலும் இரவு தலைக்கு குளித்து விட்டு காலையில் எழுந்தால் உங்கள் முடி மிருதுவாக இருக்கும். இரவில் குளித்து விட்டு தூங்குவது உங்கள் முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும். ஆகவே இரவு தூங்கும் முன் குளிக்கும் பழக்கத்தை பின்பற்றுவது மிகவும் ஆரோக்கியமான விஷயம். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ #WHATSAPP_GROUPS 👇👇👇👇 https://ift.tt/3pNtsux #FACEBOOK_PAGE 👇👇👇 https://ift.tt/3hk68md #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan WEBSITE 👇👇👇 https://ift.tt/3bgkArn #விளம்பரங்களுக்கு 👇👇👇 https://ift.tt/3fKZbt1
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.