கொரோனா வைரஸ் பரவலில் மேல் மாகாணம் அபாய வலயத்தில்...
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கொரோனா வைரஸ் பரவலில் மேல் மாகாணம் அபாய வலயத்தில்...
கொரோனா வைரஸ் பரவலில் மேல் மாகாணம் அபாய வலயத்தில்...
கொரோனா வைரஸ் பரவலில் மேல் மாகாணம் அபாய வலயமாக உள்ளது என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். இதன்படி ,அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘வீட்டிலே இடம்பெறுகின்ற கொரோனா மரணங்கள், அதேபோன்று மரணங்களின் போதான கிரியைகள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்று சுகாதாரத்துறையின் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறிருக்க பிரபல ஊடக நிறுவனமொன்றின் தலைவரது கொரோனா மரணம் அண்மையில் சம்பவித்தது.
அந்தச் சந்தர்ப்பத்தில் பலர் அவரது இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள் பாதுகாப்பு கவசம், உடைகளை அணிந்திருக்கவில்லை. இவ்வாறான விடயங்களுக்கு இடமளிப்பதா? இது ஒரு விமர்சனத்துக்குரிய விடயமாக மறிவிட்டதே?’ என்று குறித்த ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், நீங்கள் கண்ட காட்சிகளில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவியுங்கள். கொரோனாத் தொற்று பரவல்களுக்கான சாத்தியக்கூறுகள் அங்கு நடந்திருப்பின் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவியுங்கள் என்றார்.
‘வீடுகளில் நடக்கும் மரணங்களில் பி.சி.ஆர். பரிசோதனையை நடத்தி கொரோனா மரணத்தை உறுதிபடுத்துவதில் ஒரு தாமதம் காணப்படுகின்றது.
வீடுகளில் மரணிப்பவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றால் பி.சி.ஆர். பரிசோதனைக்கும் முன்பும் பின்பும் அது கொரோனா மரணமாகவே கருதப்படுகின்றது. எனவே, இவ்வாறான மரணங்களுக்குத் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்வதற்கான அனுமதியை தாருங்கள்’ என்று ஊடகவியலாளர் ஒருவர் வேண்டுகோளை முன்வைத்தார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.