July 30, 2021 at 08:58PM
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இன்றைய மருத்துவ குறிப்பு. சொத்தை பல் வலியா ? அதை தவிர்க்க சில வழிகள். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் வாய் சுகாதாரம் மிகவும் முக்கியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில நேரங்களில் பற்களின் மேற்பரப்பில் பிளேக் கட்டமைப்பு அல்லது பாக்டீரியா, மோசமான வாய் சுகாதாரம் மற்றும் கனிமச்சத்து குறைபாடு ஆகியவற்றால் பல் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். சிலருக்கு பற்களில் சிறு துளைகள் போன்று சொத்தைப் பற்கள் ஏற்படலாம். சொத்தைப் பற்களுக்கு முக்கிய காரணம் பல் சிதைவு. இந்த நிலை மிகவும் வலிமிக்கதாக இருப்பதோடு, சில உணவுகளை உண்ணும் போது பற்கூச்சத்தைக் கூட அனுபவிக்கலாம். சொத்தைப் பற்களால் வலி ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகள் அந்த துளைகளில் சிக்கிக் கொள்வது தான் காரணம். சொத்தைப் பற்களில் வலி ஏற்பட ஆரம்பித்துவிட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பல் பிரச்சனைகளுக்கு மருத்துவரை சந்திப்பது என்பது கடினமான விஷயமாக இருப்பதால், தற்காலிகமாக வீட்டிலேயே ஒருசில கை வைத்தியங்களின் மூலம் சொத்தைப் பல் வலிக்கு தீர்வு காணலாம். இரவு நேரத்தில் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் சொத்தைப் பல் வலி வந்தால், அதில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில எளிய இயற்கை வழிகளைக் காண்போம். கிராம்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வலி நிவாரண பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. சொத்தைப் பல் வலியில் இருந்து விடுபட கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். ஒருவேளை வலி மிகவும் கடுமையாக இருந்தால், கிராம்பு எண்ணெயை வலியுள்ள பல்லின் மீது நேரடியாக தடவுங்கள். உப்பு வீக்கத்தைக் குறைக்கவும், வலியைப் போக்கவும், தொற்றை எதிர்க்கவும் மற்றும் வாயில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது. அதற்கு ஒரு டீஸ்பூன் உப்பை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னரும் வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். இதனால் சொத்தை பற்களால் வலி ஏற்படுவது தடுக்கப்படும். பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் நிறைந்துள்ளது. இது ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு சிறிது பூண்டு பற்களை தட்டி, அதில் சிறிது கல் உப்பை சேர்த்து கலந்து, வலியுள்ள பல்லின் மீது வைக்க வேண்டும். இதனால் சொத்தைப் பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள், சொத்தைப் பல் வலியில் இருந்து விடுவிக்கும். அதற்கு மஞ்சள் பொடியை நேரடியாக பாதிக்கப்பட்ட பல்லின் மீது தடவி சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். கடுகு எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதிலும் இந்த எண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் செய்வது நல்லது. இதனால் பற்களில் இருந்து அழுக்குகள் நீங்கும். 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடியை கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, பற்களின் மீது தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். உங்கள் பற்கள் மற்றும் ஈறுகள் பலமாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க...! நல்ல வாய் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் அத்தியாவசியமானது. ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகளைத் தவிர்ப்பதே சிறந்தது. மேலும் ஒருவரது பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, சீரான இடைவெளியில் பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். அதோடு ஒருசில உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். இயற்கை சீஸைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். பதப்படுத்தப்பட்ட சீஸ் பொருட்களான டிப்ஸ் மற்றும் ஸ்ப்ரே போன்றவை பற்களின் எனாமலை பாதிப்பதோடு, பற் சொத்தைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும். பால் பொருட்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருப்பது பால். இத்தகைய பால் எலும்புகளை வலிமைப்படுத்த உதவுவதோடு மட்டுமிக்றி, பற்களின் எனாமலைப் பாதுகாக்கும். ஆகவே உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் பால் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். காய்கறிகளான செலரி, கேரட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இவ்வாறு காய்கறிகளை பச்சையாக மென்று சாப்பிடுவதால் ஈறுகளின் வலிமை தூண்டப்படுவதோடு, பற்களின் ஆரோக்கியமும் பராமரிக்கப்படும். கூடுதலாக, கேரட் மற்றும் செலரியில் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளன. இவை உடலுக்கு வைட்டமின் ஏ சத்தை உருவாக்க தேவையானவை. வைட்டமின் ஏ தான் வலுவாக பற்களை உருவாக்குவதற்கான முக்கிய ஊட்டச்சத்து ஆகும். ஆப்பிளை ஒரு நேச்சுரல் டூத் பிரஷ் என்றே கூறலாம். ஏனெனில் ஆப்பிள் ஈறுகளின் ஆரோக்கியத்தை தூண்டுவதோடு, பற்களில் சொத்தையை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் பெருக்கத்தைக் குறைக்கிறது. மேலும் ஆப்பிளை மென்று சாப்பிடும் போது, வாயில் எச்சில் சுரப்பு அதிகரித்து, வாயில் உள்ள அமிலத்தன்மை குறைந்து, வாய் துர்நாற்றமும் தடுக்கப்படுகிறது. கீரைகளான பசலைக்கீரை மற்றும் கேல் போன்றவை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டவை. முக்கியமாக இவை வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை. ஏனெனில் இவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. இது பற்களின் எனாமலை அதிகரிக்க உவுகிறது மற்றும் இவற்றில் ஃபோலிக் அமிலம் என்னும் ஒரு வகையான வைட்டமின் பி-யும் உள்ளது. மீன்களில் உள்ள ஒமேகா-3 மீன் எண்ணெய்கள் DHA மற்றும் EPA ஆகியவை ஈறு அழற்சி நோயான பீரியண்டோன்டிடிஸ் அபாயத்தைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க டயட்டெடிக் அசோசியேஷனின் ஜர்னலில் ஆராய்ச்சி கூறுகிறது. கூடுதலாக, டுனா, ட்ரௌட் மற்றும் காட்டு சால்மன் போன்றவற்றில் வைட்டமின் டி மற்றும் இதயத்திற்கு நன்மையளிக்கும் கொழுப்புக்களும் நிறைந்துள்ளன. நட்ஸ்களை மென்று சாப்பிடும் போது வாயில் அதிகளவு எச்சில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்க உதவி புரிந்து, சொத்தை பற்களின் அபாயத்தைக் குறைக்கிறது. ஒரு கைளயவு பாதாமில் கால்சியம் அதிகமாக நிறைந்துள்ளது. ஒரு கையளவு வால்நட்ஸில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் ஈ, பொட்டாசியம், ஜிங்க் போன்ற பற்களுக்கு நன்மையளிக்கும் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீயில் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளன. இவை பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவி புரிந்து, சொத்தைப் பற்கள் மற்றும் ஈறு நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். அதிலும் ப்ளாக் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட உதவும். உலர் திராட்சை சாப்பிடும் போது பற்களில் ஒட்டிக் கொள்வது போன்ற ஒரு உணவுப் பொருள் தான். ஆனால் உண்மையில் இதில் உள்ள குறிப்பிட்ட பைட்டோகெமிக்கல்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து, சொத்தைப் பற்கள் மற்றும ஈறு நோய்களைத் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ #WHATSAPP_GROUPS 👇👇👇👇 https://ift.tt/3pNtsux #FACEBOOK_PAGE 👇👇👇 https://ift.tt/3hk68md #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan WEBSITE 👇👇👇 https://ift.tt/3bgkArn #விளம்பரங்களுக்கு 👇👇👇 https://ift.tt/3fKZbt1
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.