மின்விசிறி விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு...
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
மட்டக்களப்பு காத்தான்குடி காவற்துறை பிரிவிலுள்ள காங்கேயனோடை பகுதியின் வீடொன்றிலிருந்து 3 வயது ஆண் குழந்தையின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
இதன்படி ,காங்கேயனோடை பத்ரு. பள்ளிவாசல் வீதியில் உயிரிழந்த குழந்தையின், வீட்டிலிருந்தே குறித்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. முஹம்மத் ரிழ்வான் எனும் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குழந்தையின் தாய், குளித்து விட்டு வீட்டில் வந்து பார்த்தபோது குழந்தை படுத்து கிடந்ததாகவும், குழந்தையின் மீது வீட்டிலுள்ள மேசை மின்விசிறி ஒன்று விழுந்து கிடப்பதையும் அவதானித்துள்ளார்.
மேலும், குழந்தையை எழுப்பிய போது, குழந்தை எழுப்பாத நிலையில், அயலவர்களின் உதவியுடன் குழந்தையை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்திசாலையில் தெரிவித்ததாக தெரியவருகின்றது.
இதற்கமைய ,குறித்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர். குழந்தையின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.