முகநூல் நண்பியை வீட்டிற்கு அழைத்ததால் நேர்ந்த விபரீதம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
முகநூல் நண்பியை வீட்டிற்கு அழைத்ததால் நேர்ந்த விபரீதம்.
இளைஞர் யுவதிகளே அவதானம். முகநூல் நண்பியை வீட்டிற்கு அழைத்ததால் வீட்டில் இருந்த தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று கொட்டுகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
இந்நிலையில் முகநூல் ஊடாக நட்பை ஏற்படுத்தி திருட்டில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில 24 வயதான பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
முகனூலூடாக சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது யுவதியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்ட சந்தேகநபர், அந்த யுவதியின் வீட்டுக்கு இரண்டு தடவைகள் சென்றுவந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இரண்டு தடவைகளுயும் யுவதியின் வீட்டிலிருந்த தங்கநகைகளைத் திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.
இறுதியாக நேற்றுமுன்தினம் யுவதியின் வீட்டுக்குச் சென்ற சந்தேகநபர், சுமார் மூன்றரைப் பவுன் தங்கநகைகளைத் திருடியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.