தாயும் பிள்ளைகளும் உறங்கிய மெத்தையின் கீழிருந்து 30 பாம்பு குட்டிகள் மீட்பு !
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
தாயும் பிள்ளைகளும் உறங்கிய கட்டில் மெத்தையின் கீழ் 30 நல்ல பாம்பு குட்டிகள் மீட்கப்பட்ட சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருணாகல் மாவட்டம் மாவத்தகம தெல்கொல்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இவ்வாறு பாம்பு குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
வீட்டில் இருப்பவர்களின் தகவலை அடுத்து அங்கு சென்ற சூழலியலாளரும், குருணாகல் பிரதேச சபையின் பணியாளருமான கெலும் சோமரட்ன என்பவர் இந்த பாம்புக்குட்டிகளை நேற்று மீட்டுள்ளார். இந்த வீட்டின் உரிமையாளரது மனைவியும் பிள்ளைகளும் கட்டில் மெத்தையில் பாம்புக் குட்டிகள் இருப்பது தெரியாது, சில நாட்கள் நித்திரை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன் தினம் இரண்டு பாம்புக் குட்டிகளை கண்ட வீட்டின் உரிமையாளர் அவற்றை அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் நேற்றும் மெத்தையில் ஒர் பாம்புக் குட்டி நித்திரை கொண்டவர்களின் மேல் ஏறிச் சென்றதனால் சந்தேகத்தின் பேரில் கட்டில் மெத்தையை எடுத்து பார்த்த போது பாம்புக் குட்டிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.