இன்றைய மருத்துவ குறிப்பு பிஸ்தாவில் உள்ள மிக முக்கிய வைட்டமின்கள்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாண பகுதிகளில் 1903 முதல் இந்த மரங்கள் அதிக அளவில் பயிர் செய்யபட்டன. உலகிலேயே இங்குதான் அதிக அளவில் பிஸ்தா உற்பத்தி செய்யபடுகிறது.
பிஸ்தாவில் 30 வகையான வைட்டமின்கள், மினரல்கள், பைடோ ஊட்டச்சத்துகள் உள்ளிட்ட பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு கட்டுப்படுத்துகிறது.
மேலும் இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல இரத்த ஓட்டத்தை சீராக்கி அதிக இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பிஸ்தா சாப்பிட்டதும் உடலில் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது. பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது, மற்றும் குடலில் நல்ல பாக்டீரியா வளர்வதற்கு உதவி செய்கிறது.
குடலில் உள்ள பாக்டீரியாக்கள் இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்றும் பல நன்மைகளை கொண்ட கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்கிறது. பிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் உடலின் நோயெதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கிறது. பிஸ்தா பருப்பை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது கர்ப்பிணிகளின் உடலுக்கு முக்கியமான பல ஊட்டச்சத்துக்களைக் தருகிறது.
பிஸ்தா ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மேலும் இது, செல்களுக்கு தேவையான ஆக்சிஜனையும் கொடுக்கிறது. பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
மேலும் ரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட்டு வந்தால் நியாபக சக்தி அதிகரிக்கும்.
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ ஆனது, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது.
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.