கடந்த பத்து நாட்களில் கொரோனா தொற்று காரணமாக 591 பேர் உயிரிழந்துள்ளனர்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கடந்த பத்து நாட்களில் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக 591 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து நாட்களில் 21344 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் காரணமாக மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கோவிட் காரணமாக 18 வயதுக்கும் குறைந்த சிறார்கள் 14 பேர் மரணித்துள்ளனர் என பவித்ரா தெரிவித்துள்ளார்.
19 வயதுக்கும் குறைந்த 19688 சிறார்கள் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன், 10 முதல் 18 வயதுக்கும் இடைப்பட்ட 26143 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.