கொரோனாவால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கொரோனாவால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு.
கொரோனாவால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் இன்று (5) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படி ,10 வயதிற்கு உட்பட்ட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 10-18 வயதிற்கு உட்பட்ட 26 ஆயிரத்து 143 குழந்தைகள் கொரோனானவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கொரோனா வைரஸால் 18 வயதிற்குட்பட்ட 14 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.
இந்த நிலையில், 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகள் தொடர்கின்றன என்று அவர் கூறினார்.
மேலும் ,இதன்மூலம் மற்றுமொரு கொரோனா அலையைத் தவிர்க்க முடியும் என்று அதிகாரிகள் நம்புவதாக வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் கூறினார்.
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.