இன்றைய மருத்துவ குறிப்பு கார உணவுகள் உடலுக்கு நல்லதா?
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கார உணவுகள் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அவற்றை அளவோடு எடுத்துக்கொண்டால் முழுமையான பயன் கிடைத்துவிடும்.
பொதுவாக கார உணவுகளில் விட்டமின் ஈ நிறைந்துள்ளன, மேலும் கார வகை உணவுகள் உழிழ் நீரை நன்கு சுரக்கச் செய்கிறது. குடை மிளகாய் என்பது, வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு.
இருப்பினும், நாம் உணவோடு சேர்த்து உண்ணும், சாதாரண பச்சை மிளகாயை, சாதாரணமாக விட்டுவிட முடியாது. பச்சை மிளகாயில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
மிளகாயை பயன்படுத்துவதால் மூக்கடைப்பு சரியாகும். பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் ஈ சத்து, சருமத்தில் எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிகிறது. அதனால் காரமான உணவை உண்பதன் மூலம், நல்ல சருமத்தை பெற முடியும். மிளகாயில் கலோரிகள் இல்லை, அதனால், உடல் எடையை குறைக்க, டயட்டில் இருக்கும் போது கூட, மிளகாயை பயன்படுத்தலாம்.
எந்த சமையலுக்கும் சுவைகூட்டும் முக்கியப் பொருளான மிளகாயில், நல்லதும் கெட்டதுமான அம்சங்கள் இணைந்தே இருக்கின்றன என்பதே உண்மை. பச்சை மிளகாய், செத்தல் மிளகாய், குடைமிளகாய் என மிளகாயில் பல வகைகள் உள்ளன.
எல்லா மிளகாய்க்கும் குணங்கள் ஒன்றே. செத்தல் மிளகாயில் கலோரியும், விட்டமின் யு சத்தும் மற்றதைவிட சற்றே அதிகம். கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம். தவறில்லை.
எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு மற்றவர்களைப் போல எல்லா உணவுகளையும் சாப்பிட முடியாது. எந்த உணவையும் சுவைபட மாற்ற, அவர்கள் மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம். பச்சை மிளகாயை உண்பதால், புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனை வராமல் தடுக்க முடியும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை, சம நிலையில் வைக்க உதவும்.
உணவு செரிமானத்தை வேகப்படுத்தும் பச்சை மிளகாயில், நார் சத்துக்கள் உள்ளன, இதனால், உணவு செரிமானம் வேகமாக நடக்கும். மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்பின்ஸை உற்பத்தி செய்யும்,இது, மனநிலையை நன்றாக வைத்திருக்கும். பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் பாதிப்பு குறைகிறது. பாக்டீரியா தொற்று வராமல் காக்கும் பச்சை மிளகாயில், ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளன. இந்த குணத்தால் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
பெருங்காயம்,சுக்கு,மிளகு, கடுகு, துளசி ,வெற்றிலை போன்றவை காரச் சுவையுள்ள பொருட்கள். காரசாரமான உணவு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.உடலில் கபத்தை குறைக்கும். ஜீரணசக்தியை வளர்க்கும். உடலை சுத்தப்படுத்தி புலன்களை தெளியச் செய்யும்.
உறைந்த ரத்தத்தை உடைக்கும்,மேலும் தொண்டை நோய்,அரிப்பு இவற்றை தணிக்கும். ஆனால் அதிக காரம் பல பிரச்சனைகளை விளைவித்துவிடும்.
நாவறட்சி,உடல் இளைத்தல்,நடுக்கம்,மயக்கம் போன்ற வலியை ஏற்படுத்தும். எனவே எப்போதாவது காரமான உணவு சாப்பிடுவதால் உடலுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.