நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு?
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு?
நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் மாற்று வழிகள் இன்றி நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதன்படி ,நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்தமையை அடுத்து இலங்கையிலும் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன. எவ்வாறிருப்பினும் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும் டொலர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் கடன் உறுதி கடிதத்தை திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமையினால், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்வதில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக அறிவித்திருந்தது.
அதனையடுத்து , லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானித்தால், அதற்கான கேள்வியை நிரப்புவதற்கு லிட்ரோ நிறுவனத்திற்கு முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக கடந்த ஜூலை 20ஆம் திகதி அறிவித்திருந்தார்.
இருப்பினும் , லாஃப்ஸ் எரிவாயுக்கு பதிலாக லிட்ரோ எரிவாயு கொள்கலனை விநியோகிக்குமாறு நிறுவனத்திடமிருந்து தமக்கு அறிவிக்கப்படவில்லையென லிட்ரோ விநியோக முகவர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.