இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடுகள்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
நாட்டில் தற்போதைய கொவிட் பரவல் நிலைமை கருத்திற்கொண்டு, இதுவரையில் வழங்கப்பட்டிருந்த அனுமதி சிலவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
அதற்கைமய, 500 க்கும் அதிகமான இருக்கைகளைக் கொண்ட மண்டபங்களில் இடம்பெறும் சகல நிகழ்வுகளிலும் 150 பேர் மாத்திரமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறே 500க்கு குறைந்த இருக்கைகள் கொண்ட மண்டபங்களில் 100 பேர் மாத்திரமே பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன் அரச நிகழ்வுகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளன.
மேலும் மரண நிகழ்வுகளில் 25 பேர் மட்டுமே பங்குக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.