நாட்டை முடக்குங்கள் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு குறைந்தது 2 வாரங்களுக்கேனும் நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லன இதனைத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான பெரும்பாலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தவறியமையே தற்போதைய ஆபத்தான நிலைமைக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆரம்பங்களில் இருந்தே கொரோனா தொடர்பில் பல்வேறு எச்சரிக்கைகளை தமது சங்கம் வெளியிட்டு வந்ததாகவும், ஆனால் அரசாங்கம் அதை புறக்கணித்தாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டை முடக்குவதால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றாலும், குறைந்தது 2 வாரங்களுக்காவது நாட்டை முடக்க வேண்டும். இல்லையென்றால் 2 வாரங்களில் அரசாங்கத்திற்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பை விட இரு மடங்காக பாதிப்புகள் ஏற்படுமெனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. (Thai TV)
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.