கொழும்பில் இருப்போருக்கு அவசர அறிவிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

கொழும்பில் இருப்போருக்கு அவசர அறிவிப்பு. 

கொழும்பில் நிரந்தரமாக வசிப்போர் அல்லது வாடகைக்கு குடியிருப்போருக்கு மிக முக்கியமான அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக, இதுவரையிலும் ஒரு தடுப்பூசியையேனும் ஏற்றிக்கொள்ளாத, கொழும்பைச் சேர்ந்தவர்கள் ஏதாவது தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 “அவ்வாறனவர்கள், கொழும்பு சுகததாச உள்ளக அரங்குக்குச் சென்று, தப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு” பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார். 

இன்றுக்காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் மாலை 4 மணிவரையிலும் முன்​னெடுக்கப்படும். சமூக பொலிஸ் அதிகாரிகள், கொழும்பு மாநகர சபையின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

தடுப்பூசி வகைகளைப் பற்றி சிந்தித்து கொண்டிருக்காது, ஏதாவது ஒரு வ​கை தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.