நாடு எவ்வேளையிலும் முடக்கப்படலாம் - ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


நாடு எவ்வேளையிலும் முடக்கப்படலாம் - ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம். 

நாட்டில் கொரோனா மற்றும் டெல்ட்டா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் 1.5 வீதமானோர் உயிரிழப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.

 இதனால் நாட்டை சில வாரங்களுக்கு முடக்குவதற்கு அரசு தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. தற்போதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூட்டமொன்று நடந்துவருகிறது .

 கொரோனா தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை நூறை தாண்டியுள்ளதால் உடனடியாக பொதுமுடக்கம் ஒன்றுக்கு செல்வதே சிறந்ததென அரச உயர்மட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எந்நேரத்திலும் நாட்டை முடக்குவதற்கான அறிவிப்பு வெளிவரலாமென எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேவேளை ,டெல்ட்டா திரிபு பரவும் நிலையில், மக்கள் சீக்கிரமாக தடுப்பூசியை பெறுமாறும் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் நடமாட வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டே சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

 நாட்டில் 1.5 சதவீதமான கொரோனா நோயாளர்கள் உயிரிழப்பதாகவும், அதிகளவானோர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 அனைவரும் முதலில் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும், உலகலளவில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களே உயிரிழந்து வருகின்றனர்.

அத்தியாவசிய காரணங்கள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்,சன நெரிசல் உள்ள திருமண, மரண மற்றும் வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதை முழுமையாக தவிர்க்கவும் , பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் கட்டாயமாக அணியவும் அறைகள், விடுதிகள், மின்தூக்கி, வாகனம் போன்றவற்றில் நெரிசலாக பயணிப்பதை தவிர்க்கவும். 

, அவ்வப்போது சவர்க்காரம் இட்டு கைகளை கழுவவும் , தனிமனித இடைவெளியாக 2 மீற்றர் தூரத்தை பின்பற்றவும் , தொற்றாநோய்கள் இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். – எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Thai TV) ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.