பால்மாவின் விலை தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளை.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பால்மாவின் விலை தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளை.
பால்மாவின் விலை தொடர்பில் வாழ்க்கை செலவுக் குழு நாளை கூடவுள்ளது.
பால்மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.
மேற்படி கலந்துரையாடலானது நாளை காலை 10 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிப்பு மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர்ச்சியான வீழ்ச்சி போன்ற காரணிகளின் அடிப்படையில் உள்ளூர் பால்மா இறக்குமதியாளர்கள் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இருப்பினும் அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை. பால்மா இறக்குமதியில் நிலவும் சிக்கல் நிலை காரணமாக , சந்தையில் பால்மாவிற்கு தொடர்ச்சியாக பற்றாக்குறை நிலவுகிறது.
பால்மா இறக்குமதியாளர்கள் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை முன்னவைத்துள்ளனர்.
எனினும் அரசாங்கம் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான இறுதித் தீர்மானமானது நாளை இடம்பெறவுள்ள வாழ்க்கை செலவுக் குழு கூட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.