இலங்கை உட்பட 5 நாடுகளின் பயணிகளுக்கு தடையை தளர்த்தியது மலேசியா!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
இலங்கை உட்பட 5 நாடுகளின் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மலேசியா தளர்த்தியுள்ளது. இதன்படி நிரந்தர வதிவிட அஸ்தஸ்து, நீண்ட கால பாஸ், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோர் குறித்த 5 நாடுகளிலிருந்து மலேசியாவுக்குள் நுழைய லாம்.
மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி முதல் கடுமையான நிபந்த னைகள் விதிக்கப்பட்டன. இந்தியா, இலங்கை. பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக் கப்பட்ட பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டுள்ளதாக மலேசியாவின் குடிவரவு இயக்குநர் நாயகம் கைருல் டைமி தாவுத் தெரிவித்தார்.
இவ்வாறு வருகை தருவோர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருத்தல் வேண்டும். நாட்டுக்கு வந்ததும் கொவிட் சோதனைக்குள்ளாக வேண்டும். மேலும் நாட்டில் புதிய திரிபுகள் பரவுவதைத் தடுக்க சுகாதார அமைச்சால் சகல வெளிநாட்டவருக்கும் நிர்ணயிக் கப்பட்ட காலத்துக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என குறித்த 5 நாடுகளின் தூதரகங்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான தடை மலேசியாவில் இன்னும் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.