பிக்பாஸ் 5 போட்டியாளராக வெளிநாட்டு தொழிலதிபர்?
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளர்களில் ஒருவராக வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் எதிர்வரும் அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகவுள்ளது. போட்டியாளர்களின் உத்தேச பட்டியலும் நாளுக்கு நாள் மாற்றங்களுடன் உலா வந்து கொண்டிருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி விஜய் டிவி பிரியங்கா, ஷகீலா மகள் மிலா, குக் வித் கோமாளி கனி, நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன் ஆகிய திரை பிரபலங்கள் கலந்து கொள்வதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இந்நிலையில் ப்யூட்டி சலூன் நடத்தி வரும் தொழிலதிபரான ரேணுகா பிரவீன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த ரேணுகா பிரவீன் சென்னையில் ப்யூட்டி சலூன் வைத்து நடத்தி வருகிறார். திரை பிரபலங்கள் குஷ்பு உள்ளிட்ட பல நடிகைகள் அவரின் நிரந்தர வாடிக்கையாளராக உள்ளனர்.
பிக்பாஸின் அனைத்து சீசன்களிலும் வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் இடம் பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனுக்கு ரேணுகா பிரவீன் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.