ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியதன் பின்னர் நாட்டை முழுமையாக திறப்பது குறித்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியதன் பின்னர் நாட்டை முழுமையாக திறப்பது குறித்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மக்கள் மேலும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு சுகாதார வழிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும் இராணுவத்தளபதி இதன்போது கேட்டுக்கொண்டார்.
அத்தோடு, புத்தாண்டு உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளையும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக கொண்டாடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அப்படி இல்லையெனில் மீண்டும் கொரோனா அலை நாட்டில் பரவுவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போது நாட்டின் கொரோனா நிலைமை திருப்தி கொள்ளும் அளவிற்கு குறைந்து வருவதாக தெரிவித்த இராணுவத்தளபதி, எதிர்வரும் 3 மாதங்களில் மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியுமென எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
நாடு மீள திறக்கப்படும் போது சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்ற வேண்டியது மக்களின் கடமையெனவும், தற்போது மக்கள் தொகையில் 50 சதவீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்தாகவும் இராணுவத்தளபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.