பாடும் நிலா மறைந்து ஓராண்டு நிறைவு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
பாடும் நிலா மறைந்து ஓராண்டு நிறைவு.

அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் ரசிகர்களின் மனங்களை தன் வசம் ஈர்த்த காந்த குரலுக்கு சொந்தக்காரர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் நம்மை விட்டு மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. 

பின்னணி பாடகர், டிவி பிரபலம், இசை அமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர் என தான் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டியவர் எஸ்பிபி.

 தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 6 மொழிகளிலும் காலத்தால் அழிக்க முடியாத,நெஞ்சை விட்டு அகலாத பல ஆயிரக் கணக்கான பாடல்களை பாடி தனது காந்த குரலால் பலகோடி மக்கள் மனதில் நின்று வசீகரித்தவர் எஸ்பிபி.

 கேளடி கண்மணி படத்தில் 'மண்ணில் இந்த காதலன்றி' பாடலையும், அமர்க்களம் படத்தில் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாடலையும் மூச்சுவிடாமல் பாடி இந்த தலைமுறை ரசிகர்கள் வரை வியப்பில் ஆழ்த்தியவர் இவர். 

நான்கு மொழிகளில் சிறந்த பாடகருக்கான தேசிய திரைப்பட விருதினை 6 முறை வென்ற எஸ்பிபி, தெலுங்கு சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக ஆந்திரா மாநில அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்றுள்ளார்.

 ஏராளமான தமிழக மற்றும் கர்நாடக அரசு விருதுகளையும் பெற்ற இவர் இந்திய சினிமாவின் Personality of the Year என்ற சில்வர் பீக்காக் விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளையும் வென்றுள்ளார். 

இந்த புகழுக்கெல்லாம் அதிபதியான பாடும் நிலா எஸ்பிபி கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் திகதி உலகை விட்டு பிரிந்தார். தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து ஆண்டுவந்த அந்த காந்த குரல் நிரந்தர ஓய்வெடுக்க சென்ற துயரம் இன்றுவரை ரசிகர்கள் மனங்களில் ஆறாத வடு,மாறாத தடம் தான். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.