சந்தைப்படுத்த முடியாததன் காரணமாக 50,000 கெக்கரிக் காய்களை மாடுகளுக்கு வழங்கிய விவசாயி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 சந்தைப்படுத்த முடியாததன் காரணமாக 50,000 கெக்கரிக் காய்களை மாடுகளுக்கு வழங்கிய விவசாயி.*

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் கெக்கரிக்காய் பயிர்ச் செய்கையில் ஈடுப்பட்டு வந்த விவசாயி ஒருவர் தனது உற்பத்திக்களை சந்தைப்படுத்த முடியாததன் காரணமாக அவற்றை மாடு வளர்க்கின்றவர்களை பிடுங்கிச் செல்ல அனுமதித்துள்ளதாகவும் இதனால் தனக்கு பல இலட்சங்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயியான சுப்பிரமணிம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். 

கெக்கரிக்காய் உற்பத்தி செய்த போது அவை நல்ல விளைச்சலை தந்ததாகவும், இந்த முடக்க காலத்திற்கு முன் கிலோ 50 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்த அவர் முடக்க காலத்தில் 10 ரூபா 15 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த விற்பனையும் இடம்பெறாமையால் பெருமளவு கெக்கரிக்காய்கள் பழுத்தும், பழுதடைந்தும் நிலையில் தற்போது மாடு வளர்க்கின்றவர்களை பிடுங்கிச் செல்லுமாறு கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

 தினமும் சுமார் பத்துக்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு தாங்கள் வளர்க்கும் மாடுகளுக்கு பிடுங்கிச் செல்வதாகவும் தெரிவித்த அவர் முடக்க நிலைக்கு முன்னர் நாளாந்தம் 500 தொடக்கம் 1000 கிலோ கிராம் வரை சந்தைப்படுத்தி வந்தாகவும் தெரிவித்தார். 

விவசாயிகள் தொடர்ந்தும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்பட முடியாத சூழல் ஏற்பட்டு வருகின்றது என்றும் அவர் கவலை தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 
👉எமது #Whatsapp குழுவில் இணைய 
👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.