சினிமாவில் ஏன் நுழைகிறாய்? என்றாள் என் மனைவி”: ’பிரண்ட்ஷிப்’ அனுபவம் பகிரும் ஹர்பஜன் சிங்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 சினிமாவில் ஏன் நுழைகிறாய்? என்றாள் என் மனைவி”: ’பிரண்ட்ஷிப்’ அனுபவம் பகிரும் ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன்முறையாக ஹீரோவாக தமிழில் ’பிரண்ட்ஷிப்’ படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

 ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் கவனம் ஈர்த்த லாஸ்லியா ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நடிகராக நடித்த அனுபவம் குறித்து ஹர்பஜன் சிங் இந்தியா டுடேவிற்கு பேட்டி அளித்துள்ளார்.

 Advertisement அந்தப் பேட்டியில், “எனது வாழ்க்கையில் கிரிக்கெட் தவிர வேறு ஏதாவது செய்ய நினைக்கும்போது எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது. அதனால், நடிக்க ஒப்புக்கொண்டேன். முன்பே எனக்கு பஞ்சாபி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. 

ஆனால், அப்போது நான் இந்திய அணிக்காக விளையாடியதால் நடிக்க முடியவில்லை. தற்போது, வீட்டில் இருக்கிறேன். 

ஐ.பி.எல்லில் மட்டும் விளையாடுவதால் தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்பவரிடம் ” நீங்கள் நடிக்க வந்ததுக்குறித்து உங்கள் மனைவி கீதா பாஸ்ரா என்ன சொன்னார்?” என்று கேட்டதற்கு “நான் படத்தில் நடித்தது அவளுக்கு வித்தியாசமாக இருந்தது.

 ‘இதில் ஏன் நுழைகிறாய்? இது உன்னோட டீ கப் இல்லை’ என்றாள். ’சினிமாவில் நடிப்பது கடினம் அல்ல. கடினமாக உழைத்தால் எல்லாம் நன்றாக வரும்’ என்றேன்” என்று கூறியுள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.