வாட்ஸ்அப்பில் விரைவில் வெளியாக உள்ள புதிய அப்டேட்டுகள் - முழு விவரம்!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 வாட்ஸ்அப்பில் விரைவில் வெளியாக உள்ள புதிய அப்டேட்டுகள் - முழு விவரம்!
வாட்ஸ்அப் ஆப்பை 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உடனடி செய்தியிடல் தளமாகும்.
வாட்ஸ்அப் ஆப்பை 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உடனடி செய்தியிடல் தளமாகும்.
வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பிளாட்பார்மை மேலும் யூஸர் பிரெண்ட்லியாக மாற்ற, அவ்வப்போது புதிய அப்டேட்ஸ்களை வெளியிட்டு வருகிறது.
அண்மையில் பல வாட்ஸ்அப் அப்டேட்கள் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் எதிர்காலத்தில் யூசர்கள், அவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களை ஈர்க்க உதவும் வகையில் பல்வேறு அப்டேஸ்களை வெளியிட உள்ளது.
Android சாதனங்களிலிருந்து iOS சாதனங்களுக்கு அரட்டைகளை மாற்றுவது, Disappearing messages அம்சத்தில் மேம்பாடு, புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக அனுப்பும் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் வரவுள்ள அப்டேட்ஸ்களில் வெளியிட உள்ளது.
அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்., ஹை - குவாலிட்டி புகைப்படங்கள் : வாட்ஸ்அப்பில் தற்போது ஹை - குவாலிட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத நிலை உள்ளது.
இதற்கு முக்கிய காரணம், வாட்ஸ்அப் கம்ப்ரஸ் அம்சத்தில் அனுப்புவதால் அதன் குவாலிட்டியில் மாற்றம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் வாட்ஸ்அப் தற்போது யூசர்களுக்கு பெஸ்ட் குவாலிட்டி (Best Quality), டேட்டா சேவர் (Data Saver) உள்ளிட்ட அம்சத்தை வழங்க முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் யூசர்கள் உயர்தர படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியும். Disappearing messages அம்சத்தில் மேம்பாடு : வாட்ஸ்அப் சமீபத்தில் அறிமுகப்படுத்திய காணாமல் போகும் செய்தி (Disappearing messages) அம்சத்தை தொடந்து 'ஒருமுறை பார்க்கவும்' (View once) என்பதை அறிமுகப்படுத்தியது.
தற்போது இந்த அம்சத்தை மேம்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அல்லது ஏழு நாட்களுக்குப் பிறகு செய்திகளை தானாகவே நீக்குகிறது. இந்த நிலையில் எதிர்கால அப்டேட்டில் அனைத்து புதிய உரையாடல்களுக்கும் யூசர்கள் பயனர்கள் காணாமல் போகும் செய்திகளை தானாகவே செயல்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
காண்டாக்ட் பிரைவசி : வாட்ஸ்அப் ஏற்கனவே யூசர்கள் தங்கள் ப்ரொபைல் புகைப்படம், தனிப்பட்ட விவரம், ஸ்டேட்டஸ், Last Seen ஆகியவற்றை ‘My contacts’, ‘Everyone’ and ‘Nobody’ என்பதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைத்துக்கொள்ளும் அம்சம் உள்ளது.
தற்போது வரவுள்ள அப்டேட்டில் ப்ரொபைல் புகைப்படம், தனிப்பட்ட விவரம், ஸ்டேட்டஸ், Last Seen ஆகியவற்றை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் காட்டும் வகையில் கொண்டு வர உள்ளது.
இதற்காக ‘My contacts except’ என்ற புதிய அம்சத்தை இணைக்க உள்ளனர். புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக அனுப்பும் வசதி : புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவாக வெளியிட உள்ளது.
இதன்மூலம் நீங்கள் ஒரு படத்தை வாட்ஸ்ஆப்பில் அனுப்ப முயற்சிக்கும் போது அப்டேட்டில் வர உள்ள புதிய பொத்தானை பயன்படுத்தி ஸ்டிக்கர்களாக படங்களை அனுப்ப முடியும் என கூறப்படுகிறது.
இந்த அம்சம் அனைத்து யூசர்களையும் கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.