பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு.
தென்மாகாணத்தில் உள்ள 200இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஒக்டோபர் 15ஆம் திகதி மீள திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.
தென்மாகாணத்தில் 200இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 514 பாடசாலைகள் காணப்படுவதாகவும், தற்போது மேற்படி பாடசாலைகளில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதோடு, அதன் பின்னர் 15ஆம் திகதி வரை பாடசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பாடசாலைகளை சுத்தம் செய்வதற்காக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இந்நடவடிக்கைகளுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.