மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழு தலைவர் கோரிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழு தலைவர் கோரிக்கை.

தேவையான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். 

தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விசேட செயற்குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இதனை கூறியுள்ளார். 

மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகளை நடத்திச்செல்வது ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும், தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துதல், தெரிவுசெய்யப்பட்ட தொகுதிகளில் முன்கூட்டியே வாக்களிக்கின்றமைக்கு சந்தர்ப்பமளித்தல் மற்றும் சிறப்பு வாக்குச்சாவடிகளை நிறுவுதல் ஆகியன தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், பாராளுமன்ற விசேட செயற்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

 09 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்து 03 வருடங்கள் கடந்துள்ளதுடன், அனைத்து மாகாண சபைகளும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. 

இந்த மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பாக பரிந்துரையை வழங்குமாறு சட்டமா அதிபரிடம் தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விசேட செயற்குழு அண்மையில் கோரிக்கை விடுத்தது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.