புதிய வழிகாட்டல் கோவை வௌியீடு
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
புதிய வழிகாட்டல் கோவை வௌியீடு
நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 04 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பிலான சுகாதார வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய,
👉 அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்
👉 அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களுக்காக தினமும் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 04 மணி வரை அனுமதி வழங்கப்பட மாட்டாது
👉 பொது போக்குவரத்து சேவைகளின் போது ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்ற முடியும்
👉 பொது போக்குவரத்தின் போது வாகனங்களின் குளிரூட்டியை பயன்படுத்தாமல் வாகனங்களின் ஜன்னல்களை திறக்க வேண்டும்
👉 அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசத்தை அணிந்திருந்தல் வேண்டும்
👉 வைபவங்கள் மற்றும் மக்கள் ஒன்றுகூடும் விதத்திலான நிகழ்வுகளுக்கு ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை அனுமதியில்லை
👉 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் உள்ளே ஐவர் மாத்திரமே இருக்க முடியுமென்பதுடன் ஏனைய வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு வௌியே 01 மீட்ட இடைவௌியை பேணி வரிசையில் நிற்க வேண்டும்
👉 விவசாயத்துறைக்கு அனுமதி
👉 சிகையலங்கார நிலையங்களில் வாடிக்கையாளர்கள் தமக்கான நேரத்தை முற்கூட்டியே ஒதுக்கிக் கொள்ள வேண்டும்
👉 கல்வியமைச்சின் தீர்மானத்தின்படி, 200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறப்பதற்கு முதலில் சந்தர்ப்பம் வழங்கப்படும்
👉 பாலர் பாடசாலைகளில் 50 வீதமான மாணவர்களை ஒரு தடவையில் இணைத்துக் கொள்ள முடியும்
👉 சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க முடியும்
👉 திரையரங்குகளை திறக்க அனுமதியில்லை
👉 உடற்பயிற்சி நிலையங்களில் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஒரு தடவையில் ஐவருக்கு அனுமதி
👉 திருமண பதிவிற்காக ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை 10 பேருக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை 50 பேருக்கும் அனுமதி
👉 மரணச் சடங்குகளில் 15 ஆம் திகதி வரை 10 பேருக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை 15 பேருக்கும் அனுமதி
👉 மதவழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூட அனுமதியில்லை
👉 பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.