பால்மா தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் நம்பிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பால்மா தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் நம்பிக்கை.

(எம்.ஆர்.எம்.வசீம்) கொழும்பு துறைமுகத்தில் தேங்கி காணப்படும் 360 மெட்ரிக் தொன் பால்மா அடங்கிய 16 கொள்களன்களை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் விடுவித்துக் கொள்ள முடியும் என நம்புவதாக பால் மா இறக்குமதியாளர்களின் பேச்சாளர் லக்க்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

 துறைமுகத்தில் தேங்கி காணப்படும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலர்களை இலங்கை மத்திய வங்கி வழங்குவதாக தெரிவித்திருப்பது தொடர்பில் குறிப்படுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொழும்பு துறைமுகத்தில் தேங்கி காணப்படும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான 50 மில்லியன் டொலர்களை விடுவித்திருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. 

அதன் பிரகாரம் பால்மா இறக்குமதியாளர்களின் வங்கி கணக்குகளுக்கு குறித்த டொலர்கள் நாளைய தினத்துக்குள் கிடைக்கும் என நம்புகிறோம்.

 அரசாங்கம் தெரிவிப்பதுபோல் தேவையான டொலர்கள் நாளை தினத்துக்குள் கிடைக்கப்பெற்றால், துறைமுகத்தில் உள்ள 360 மெட்ரிக்தொன் பால்மா தொகை அடங்கிய 16i கொள்கலன்களை திங்கட்கிழமைக்குள் விடுவித்துக் கொள்ள முடியுமாகும் என நம்புகிறோம். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.