வரலாற்றில் இன்று அக்டோபர் 09.2021
வரலாற்றில் இன்று அக்டோபர் 09.2021
அக்டோபர் 9 கிரிகோரியன் ஆண்டின் 282 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 283 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 83 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்.
👉768 – முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர்.
👉1238 – முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான்.
👉1446 – அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது.
👉1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
👉1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீச இராணுவம் கண்டி இராச்சியத்தில் நடந்த போரில் முற்றாக அழிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தது.
👉1604 – சூப்பர்நோவா 1604 பால் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது.
👉1635 – தொல்குடி அமெரிக்கர்களுக்காகக் குரல் கொடுத்தமைக்காக றோட் தீவைக் கண்டுபிடித்த ரொஜர் வில்லியம்சு மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
👉1708 – உருசியாவின் முதலாம் பேதுரு லெசுனயா சமரில் சுவீடனைத் தோற்கடித்தார்.
👉1740 – டச்சுக் குடியேறிகளும் பல்வேறு அடிமைக் குழுக்களும் பட்டாவியாவில் உள்ளூர் சீன இனத்தவரைக் கொலை செய்ய ஆரம்பித்தனர். சாவகத் தீவில் இரண்டாண்டுகள் நீடித்த போரில் 10,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
👉1760 – ஏழாண்டுப் போர்: உருசியப் படைகள் பெர்லின் நகரைக் கைப்பற்றின.
👉1790 – அல்சீரியாவைத் தாக்கிய நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையினால் 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.
👉1799 – லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் £1,200,000 பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது.
👉1806 – புருசியா பிரான்சு மீது போர் தொடுத்தது.
👉1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: ஈரீ ஏரியில் இடம்பெற்ற கடற் சமரில் அமெரிக்கப் படையினர் இரண்டு பிரித்தானியக் கப்பல்களைக் கைப்பற்றினர்.
👉1820 – உவயாகில் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
👉1824 – கோஸ்ட்டா ரிக்காவில் அடிமை முறை இல்லாதொழிக்கப்பட்டது.
👉1831 – கிரேக்கத்தின் முதலாவது அரசுத்தலைவர் இயோனிசு கப்பொதிசுத்திரியாசு படுகொலை செய்யப்பட்டார்.
👉1835 – கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
👉1847 – செயிண்ட்-பார்த்தலெமியில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
👉1854 – உருசியாவில் செவஸ்தபோல் மீதான தாக்குதலை பிரித்தானியா, பிரான்சு, துருக்கியப் படைகள் ஆரம்பித்தன.
👉1871 – மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்காகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
👉1874 – அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் அமைக்கப்பட்டது.
👉1900 – குக் தீவுகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.
👉1910 – மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.
👉1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரம் செருமனியிடம் வீழ்ந்தது.
👉1934 – யுகோசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர், பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் லூயி பார்த்தோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
👉1940 – இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் சண்டை: செருமனியின் லூப்டுவாபே படைகள் இலண்டன் புனித பவுல் பேராலயம் மீது இரவு நேரத்தில் குண்டுகள் வீசின.
👉1941 – பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அரசுத்தலைவரானார்.
👉1942 – வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 ஆத்திரேலியாவின் சுயாட்சியை அங்கீகரித்தது.
👉1962 – உகாண்டா பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது.
👉1963 – வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
👉1966 – வியட்நாம் போர்: தென் வியட்நாமில் பின் தாய் நகரில் தென் கொரியப் படைகள் நடத்திய தாக்குதலில் 168 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
👉1967 – சே குவேரா பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
👉1970 – கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.
👉1980 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் தலாய் லாமாவைச் சந்தித்தார்.
👉1981 – பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.
👉1983 – ரங்கூனில் தென் கொரிய அரசுத்தலைவர் சுன் டூ-குவான் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
👉1987 – யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.
👉2001 – இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
👉2004 – ஆப்கானித்தானில் முதற்தடவையாக பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
👉2006 – வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.
👉2012 – பாக்கித்தானிய தாலிபான்கள் மலாலா யூசப்சையியைப் படுகொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
இன்றைய தின பிறப்புகள்.
👉1852 – எர்மான் எமில் பிசர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1919)
👉1864 – ரெசினால்டு டையர், பிரித்தானிய இராணுவ அதிகாரி (இ. 1927)
👉1873 – கார்ல் சுவார்சுசைல்டு, செருமானிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1916)
👉1876 – தர்மானந்த தாமோதர் கோசாம்பி, இந்தியப் பௌத்த பேரறிஞர் (இ. 1947)
👉1879 – மேக்ஸ் வோன் உலோ, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1960)
👉1897 – எம். பக்தவத்சலம், தமிழ்நாட்டின் 6வது முதலமைச்சர் (இ. 1987)
👉1908 – மு. இராமலிங்கம், ஈழத்து எழுத்தாளர், நாடகாசிரியர் (இ. 1974)
👉1909 – வ. நல்லையா, இலங்கைக் கல்வியாளர், அரசியல்வாதி
👉1911 – பி. எஸ். வீரப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1998)
👉1924 – இம்மானுவேல் சேகரன், இந்திய தலித் தலைவர் (இ. 1957)
👉1933 – சு. சுசீந்திரராஜா, இலங்கை மொழியியலாளர்
👉1940 – ஜான் லெனன், ஆங்கிலேயப் பாடகர் (இ. 1980)
👉1945 – விஜய குமாரணதுங்க, இலங்கை நடிகர், அரசியல்வாதி (இ. 1988)
👉1945 – அம்ஜத் அலி கான், இந்திய பாரம்பரிய சாரோட் இசைக் கலைஞர்
👉1950 – ஜோடி வில்லியம்ஸ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க செயற்பாட்டாளர்.
👉1959 – போரிசு நெம்த்சோவ், உருசிய அரசியல்வாதி (இ. 2015)
👉1966 – டேவிட் கேமரன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
👉1968 – டிராய் டேவிஸ், அமெரிக்கக் குற்றவாளி (இ. 2011)
👉1968 – அன்புமணி ராமதாஸ், தமிழக அரசியல்வாதி
இன்றைய தின இறப்புகள்.
👉892 – இமாம் திர்மிதி, பாரசீக உலமா (பி. 824)
👉1943 – பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1865)
👉1958 – பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1876)
👉1967 – சே குவேரா, அர்ச்செந்தீன-கியூப கெரில்லா தலைவர், மருத்துவர் (பி. 1928)
👉1974 – ஆஸ்கர் ஷிண்ட்லர், செக்-செருமானியத் தொழிலதிபர் (பி. 1908)
👉1987 – வில்லியம் பாரி மர்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1892)
👉1989 – தி. கோ. சீனிவாசன், தமிழக எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், அரசியல்வாதி (பி. 1922)
👉1995 – அலெக் டக்ளஸ் – ஹோம், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1903)
👉2003 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (பி. 1928)
👉2004 – ஜாக்கஸ் தெரிதா, அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1930)
👉2005 – மதுரை என். கிருஷ்ணன், இந்திய கருநாடக இசைப் பாடகர் (பி. 1928)
👉2006 – கன்சிராம், இந்திய அரசியல்வாதி (பி. 1934)
👉2010 – எஸ். எஸ். சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி
👉2015 – என். ரமணி, தமிழகப் புல்லாங்குழல் கலைஞர் (பி. 1934)
👉2015 – ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1937)
👉2018 – தாமசு இசுடைட்சு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1940)
இன்றைய தின சிறப்பு நாள்.
👉விடுதலை நாள் (உகாண்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1962)
👉விடுதலை நாள் (எக்குவடோர், எசுப்பானியாவிடம் இருந்து 1820)
👉உலக அஞ்சல் நாள்
👉தேசிய நானோ தொழில்நுட்ப நாள் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.