வரலாற்றில் இன்று அக்டோபர் 11.2021
வரலாற்றில் இன்று அக்டோபர் 11.2021
அக்டோபர் 11 கிரிகோரியன் ஆண்டின் 284 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 285 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 81 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்.
👉1138 – சிரியா, அலெப்போ நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
👉1142 – சீனாவில் சின் வம்சத்திற்கும், சொங் வம்சத்திற்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
👉1531 – சுவிட்சர்லாந்தில் உரோமைக் கத்தோலிக்கப் பிரிவுகளுடன் ஏற்பட்ட போரில் உல்ரிக் சிவிங்கிலி கொல்லப்பட்டார்.
👉1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
👉1634 – டென்மார்க் மற்றும் செருமனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் உயிரிழந்தனர்.
👉1649 – 10-நாள் முற்றுகையின் பின்னர், ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேயப் படைகள் வெக்சுபோர்டு நகரைத் தாக்கியதில், 2,000 அயர்லாந்துக் கூட்டமைப்புப் படையினரும், 1,500 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
👉1727 – இரண்டாம் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடி சூடினார்.
👉1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: கேம்பர்டவுன் சமரில் நெதர்லாந்து கடற்படையுடன் நடந்த மோதலில் அரச கடற்படை வெற்றியடைந்தது.
👉1811 – முதலாவது நீராவிப் படகுக் கப்பல் சேவை ஜூலியானா நியூயார்க்கிற்கும் நியூ செர்சி, ஓபோகின் நகருக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
👉1852 – ஆத்திரேலியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
👉1865 – ஜமெய்க்காவில் நூற்றுக்கும் அதிகமான கறுப்பின மக்கள் அரசுக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது அன்றைய பிரித்தானிய அரசால் நசுக்கப்பட்டதில் நானூறுக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
👉1899 – இரண்டாம் பூவர் போர் ஆரம்பம். தென்னாப்பிரிக்காவில் ஐக்கிய இராச்சியத்துக்கும் திரான்சுவால், ஆரஞ்சு இராச்சியத்தின் பூவர்களுக்கும் இடையே போர் ஆரம்பமானது.
👉1918 – புவேர்ட்டோ ரிக்கோவில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
👉1941 – மாக்கடோனியத் தேசிய விடுதலைப் போர் ஆரம்பமானது.
👉1944 – துவா மக்கள் குடியரசு சோவியத் ஒன்றியத்துடன் இணைந்தது.
👉1954 – வட வியட்நாமை வியட் மின் படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.
👉1958 – நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது.
👉1962 – இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்: திருத்தந்தை 23-ஆம் யோவான் 92 ஆண்டுகளுக்குப் பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் முதலாவது கிறித்தவப் பொதுச்சங்கத்தை ஆரம்பித்து வைத்தார்.
👉1968 – நாசா முதற் தடவையாக மூன்று விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.
👉1984 – உருசியாவின் ஓம்சுக் நகரில் ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 178 பேர் உயிரிழந்தனர்.
👉1984 – சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற கேத்ரின் சலிவன் விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
👉1986 – பனிப்போர்: அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஐரோப்பாவில் நடுத்தர ஏவுகணைகளைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் தொடர்பாக ஐசுலாந்து ரெய்க்யவிக் நகரில் சந்தித்தனர்.
👉1987 – விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை என்ற பெயரில் போரை ஆரம்பித்தது.
👉2000 – டிஸ்கவரி விண்ணோடம் நாசாவின் 100-வது விண்ணோடத் திட்டமாக ஏவப்பட்டது.
👉2002 – பின்லாந்தில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
👉2006 – ஈழப்போர்: முகமாலையில் இடம்பெற்ற சமரில் 129 இராணுவத்தினரும் 22 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர். 300 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.
👉2013 – சிசிலி நீரிணையில் அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்ததில் 34 பேர் உயிரிழந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்.
👉1738 – ஆர்தர் பிலிப், நியூ சவுத் வேல்சின் 1வது ஆளுநர் (இ. 1814)
👉1758 – ஹென்ரிச் ஒல்பெர்ஸ், செருமானிய மருத்துவர், வானியலாளர் (இ. 1840)
👉1820 – ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர், புலவர் (இ. 1896)
👉1826 – மாயூரம் வேதநாயகம்பிள்ளை, தமிழ்ப் புதின முன்னோடி (இ. 1889)
👉1872 – எமிலி டேவிசன், ஆங்கிலேயக் கல்வியாளர், செயற்பாட்டாளர் (இ. 1913)
👉1884 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்காவின் 39வது முதல் சீமாட்டி (இ. 1962)
👉1896 – உரோமன் யாக்கோபுசன், உருசிய-அமெரிக்க மொழியியலாளர் (இ. 1982)
👉1902 – ஜெயபிரகாஷ் நாராயண், இந்திய அரசியல்வாதி (இ. 1979)
👉1908 – கே. பி. சுந்தராம்பாள், தமிழிசைப் பாடகி, நாடக, திரைப்பட நடிகை (இ. 1980)
👉1916 – நானாஜி தேஷ்முக், இந்தியக் கல்வியாளர், செயற்பாட்டாளர் (இ. 2010)
👉1917 – வீக்தர் செர்கேயெவிச் சப்ரனோவ், சோவியத் உருசிய வானியலாளர் (இ. 1999)
👉1922 – எஸ். ராஜேஸ்வர ராவ், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1999)
👉1923 – ஹரிஷ்-சந்திரா, இந்திய-அமெரிக்க கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1983)
👉1926 – திக் நியாட் ஹன், வியட்நாமிய கவிஞர், மதகுரு.
👉1930 – கே. பி. உமர், இந்திய நடிகர் (இ. 2001)
👉1942 – அமிதாப் பச்சன், இந்திய நடிகர்.
👉1947 – லூகாசு பாபடெமோசு, கிரேக்கத்தின் 183வது பிரதமர்.
👉1952 – ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (இ. 2014)
👉1962 – ஆன் என்ரைட், ஐரிய எழுத்தாளர்.
👉1969 – மெரீமே சாதிது, மொரோக்கோ வானியலாளர்.
👉1977 – மாட் போமேர், அமெரிக்க நடிகர்
👉1984 – நிவின் பவுலி, மலையாளத் திரைப்பட நடிகர்
இன்றைய தின இறப்புகள்.
👉1531 – உல்ரிச் ஸ்விங்ளி, சுவிட்சர்லாந்து இறையியலாளர் (பி. 1484)
👉1889 – ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல், ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1818)
👉1896 – ஆன்டன் புரூக்னர், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1824)
👉2006 – ஏ. ஜே. கனகரத்னா, ஈழத்தின் எழுத்தாளர், கல்வியாளர் (பி. 1934)
👉2014 – அப்பாஸ் அலி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1920)
👉2015 – எஸ். ஏ. டேவிட், ஈழத்துக் கட்டடக் கலைஞர், காந்தியவாதி, செயற்பாட்டாளர் (பி. 1924)
👉2019 – கத்ரி கோபால்நாத், தென்னிந்திய சாக்சபோன் இசைக் கலைஞர் (பி. 1949)
👉2019 – அலெக்சி லியோனொவ், சோவியத்-உருசிய விண்வெளி வீரர் (பி. 1934)
இன்றைய தின சிறப்பு நாள்.
👉பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்.
👉புரட்சி நாள் (மாக்கடோனியக் குடியரசு)
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.