வரலாற்றில் இன்று அக்டோபர் 15.2021
வரலாற்றில் இன்று அக்டோபர் 15.2021
அக்டோபர் 15 கிரிகோரியன் ஆண்டின் 288 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 289 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 77 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்.
👉1066 – இங்கிலாந்தின் மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை. 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார்.
👉 1529 – வியென்னா நகர் மீதான உதுமானியரின் முற்றுகையை ஆத்திரியர்கள் முறியடித்தனர். உதுமானியரின் ஐரோப்பிய விரிவாக்கம்முடிவுக்கு வந்தது.
👉1582 – புதிய நாட்காட்டியை திருத்தந்தை பதின்மூன்றாம் கிரெகொரி கத்தோலிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தினார். இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
👉1764 – ஆர்க்காடு படைகளின் போர் வீரரும் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கிய மருதநாயகம் ஆங்கிலேயர்களினால் தூக்கிலிடப்பட்டார்.
👉1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயியின் மனைவியும் அரசியுமான மரீ அண்டோனெட் பாரிசு நகரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். அடுத்த நாள் இவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
👉1815 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள செயிண்ட் எலனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
👉1851 – இங்கிலாந்தில் பளிங்கு அரண்மனையில் அனைத்துலக வணிகக் கண்காட்சி முடிவுற்றது.
👉1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: முதற் தடவையாக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.
👉1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசூரி, கிளாஸ்கோவில் அமெரிக்க ஒன்றியப் படைகள் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தன.
👉1878 – மின்குமிழ் தயாரிக்கும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தை எடிசன் ஆரம்பித்தார்.
👉1879 – எசுப்பானியாவின் தென்கிழக்கே செகூரா ஆறு பெருக்கெடுத்ததில், 1,077 பேர் உயிரிழந்தனர்.
👉1880 – செருமனியில் கோல்ன் கதீட்ரல் திறப்பு விழா கொண்டாடப்பட்டது.
👉1904 – உருசிய-சப்பானியப் போர்: உருசியாவின் பால்ட்டிக் கடற்படை தூர-கிழக்கு நோக்கிய 77ழு-மாதப் பயணத்தை ஆரம்பித்தது.
👉1917 – முதலாம் உலகப் போர்: செருமனிக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டச்சு நடன மாது மாட்ட ஹரி பாரிசில் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.
👉1932 – டாட்டா ஏர்லைன்சு விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது. இது பின்னர் ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
👉1934 – சீன சோவியத் குடியரசு கலைந்தது. சங் கை செக்கின் தேசிய புரட்சி இராணுவம் ருயிச்சின் நகரை வெற்றிகரமாகச் சுற்றி வளைத்தது, கம்யூனிஸ்டுகள் வெளியேறினர்.
👉1940 – காத்தலோனியாவின் அரசுத்தலைவர் லூயிசு கொம்பானிசு எசுப்பானிய அரசினால் தூக்கிலிடப்பட்டார்.
👉1944 – இரண்டாம் உலகப் போர்: அங்கேரி சோவியத் ஒன்றியத்துடன் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு வந்ததை அடுத்து, செருமனி அங்கேரிய அரசை மாற்றியது.
👉1944 – இட்லரின் நாட்சிக் கட்சிக்கு ஒப்பான “அம்புக் குறுக்குக் கட்சி'” அங்கேரியில் ஆட்சியைப் பிடித்தது.
👉1945 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் முன்னாள் பிரதமர் பியேர் லாவல் நாட்டுத்துரோகத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்டார்.
👉1946 – அனைத்துலக நீதிமன்றம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை ஐநா பாதுகாப்புப் பேரவை ஏற்றுக் கொண்டது.
👉1953 – பிரித்தானியா டோட்டெம் 1 என்ற தனது அணுகுண்டு சோதனையை தெற்கு ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தியது.
👉1954 – வட அமெரிக்காவில் ஏசெல் சூறாவளி தாக்கியதில் 95 பேர் உயிரிழந்தனர். டொரோண்டோ வரை பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
👉1956 – போர்ட்ரான் என்ற முதலாவது நவீன கணினி மொழி முதல் தடவையாக குறியீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
👉1957 – பிரித்தானியக் கடற்படைத் தளம் அடங்கலான திருகோணமலைத் துறைமுகத்தை பிரித்தானியா இலங்கையிடம் கையளித்தது.[1]
👉1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் ஏவுகணைகள் கியூபாவில் இருப்பதாக நடுவண் ஒற்று முகமை அமெரிக்க அரசுத் திணைக்களத்திற்கு அறிவித்தது.
👉1966 – ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவென கருஞ்சிறுத்தைக் கட்சி என்ற பெயரில் மார்க்சிய இயக்கம் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
👉1967 – “சுடாலின்கிராட் சண்டையின் வீரர்களுக்காக” தாய்நாடு அழைக்கிறது என்ற சிலை திறந்து வைக்கப்பட்டது.
👉1970 – மெல்பேர்ண் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட மேற்கு வாசல் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
👉1979 – எல் சல்வடோர் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
👉1987 – புர்க்கினா பாசோவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் தோமசு சங்காரா சுட்டுக் கொல்லப்பட்டார்.
👉1990 – பனிப்போரைத் தணிக்க உதவியமைக்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
👉1995 – சதாம் உசேன் மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் ஈராக்கின் அரசுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
👉1997 – நாசாவின் இயூஜென்சு விண்ணுளவி சனிக் கோளை நோக்கி ஏவப்பட்டது.
👉1997 – கொழும்பு, கோட்டையில் உலக வணிக மையத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர், சுற்றுலாப் பயணிகள் உட்பட நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.[2]
👉2001 – நாசாவின் கலிலியோ விண்கலம் வியாழனின் ஐஓ சந்திரனுக்குக் கிட்டவாக 112 மைல் தூரம் சென்றது.
👉2003 – சீனா முதற்தடவையாக சென்சோ 5 விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.
👉2006 – அவாயில் 6.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நிலச்சரிவுகள், மின்சார நிறுத்தம், உட்படப் பெரும் சேதம் ஏற்பட்டது.
👉2008 – தாய்லாந்தும் கம்போடியாவும் அவற்றின் எல்லையிலுள்ள 900 ஆண்டுகள் பழமையான பிரியா விகார் கோவிலுக்காக போரிட்டுக்கொண்டன. குறைந்தது இரண்டு கம்போடிய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
👉2013 – பிலிப்பீன்சை 7.2-அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 215 பேர் உயிரிழந்தனர்.
👉2016 – ருவாண்டாவில் 150 நாடுகள் ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட உச்சி மாநாட்டில் பங்குபற்றின.
இன்றைய தின பிறப்புகள்.
👉கிமு 70 – வேர்ஜில், உரோமைக் கவிஞர் (இ. கிமு 19)
👉1218 – ஊலாகு கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1265)
👉1265 – தெமுர் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1307)
👉1542 – அக்பர், முகலாயப் பேரரசர் (இ. 1605)
👉1829 – ஆசப் ஆல், அமெரிக்க வானியலாளர் (இ. 1907)
👉1844 – பிரீட்ரிக் நீட்சே, செருமானிய இசையமைப்பாளர், கவிஞர் (இ. 1900)
👉1855 – சுப்பராயலு, சென்னை மாகாண முதலமைச்சர் (இ. 1921)
👉1863 – நெவின்ஸ் செல்வதுரை, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, ஆசிரியர் (இ. 1938)
👉1881 – பி. ஜி. வுட்ஹவுஸ், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 1975)
👉1897 – முடிகொண்டான் வெங்கடராம ஐயர் இந்திய கருடாடக இசைப் பாடகர் (இ. 1975)
👉1904 – இகோர் பெல்கோவிச், உருசிய வானியலாளர் (இ. 1949)
👉1909 – யெசே இலியோனார்டு கிரீன்சுடைன், அமெரிக்க வானியலாளர் (இ. 2002)
👉1913 – தெ. து. ஜயரத்தினம், யாழ்ப்பாணத்தின் கல்வியாளர் (இ. 1976)
👉1924 – ஏ. பீம்சிங், தமிழக இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் (இ. 1978)
👉1926 – மிசேல் பூக்கோ, பிரான்சிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1984)
👉1926 – எம். ஏ. அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (இ. 2011)
👉1927 – பி. எஸ். அப்துர் ரகுமான், இந்தியத் தொழிலதிபர் (இ. 2015)
👉1928 – எசு. எம். கமால், தமிழக வரலாற்று ஆய்வாளர். (இ. 2007)
👉1931 – ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் (இ. 2015)
👉1931 – வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர், கருநாடக இசைப் பாடகர் (இ. 2003)
👉1934 – என். ரமணி, இந்திய புல்லாங்குழல் கலைஞர் (இ. 2015)
👉1935 – பாபி ஜோ மோரோ, அமெரிக்க ஓட்ட வீரர்
👉1935 – மரியா தெரேசா மிராபெல், டொமினிக்கன் குடியரசு பெண்ணிய செயற்பாட்டாளர் (இ. 1960)
👉1936 – மதன் லால் குரானா, இந்திய அரசியல்வாதி
👉1939 – கே. டி. பிரான்சிஸ், இலங்கை துடுப்பாட்ட நடுவர் (இ. 2013)
👉1942 – போதிநாத வேலன்சாமி, அமெரிக்க இந்து சமய ஞானி
👉1944 – அரியநாயகம் சந்திரநேரு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2005)
👉1946 – யாழூர் துரை, ஈழத்து எழுத்தாளர், நாடக இயக்குனர் (இ. 2012)
👉1949 – பிரணாய் ராய், இந்திய ஊடகவியலாளர்
👉1957 – மீரா நாயர், இந்திய-அமெரிக்க நடிகை
👉1988 – மெசுத் ஓசில், செருமானிய காற்பந்து வீரர்
👉1994 – பாபர் அசாம், பாக்கித்தானொயத் துடுப்பாளர்
👉1995 – நிவேதா தாமஸ், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இன்றைய தின இறப்புகள்.
👉 925 – முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி, பாரசீக பல்துறை அறிஞர் (பி. 864)
👉1389 – ஆறாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1318)
👉1564 – ஆண்ட்ரியசு வெசாலியசு, பெல்ஜிய-கிரேக்க மருத்துவர் (பி. 1514)
👉1764 – மருதநாயகம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1725)
👉1917 – மாட்ட ஹரி, டச்சு நடன மாது, உளவாளி (பி. 1876)
👉1918 – சீரடி சாயி பாபா, இந்திய குரு (பி. 1838)
👉1930 – எர்பர்ட்டு என்றி டவ், கனடிய-அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1866)
👉1938 – வீணை தனம்மாள், தமிழக வீணைக் கலைஞர் (பி. 1868)
👉1946 – எர்மன் கோரிங், செருமானிய அரசியல்வாதி (பி. 1893)
👉1958 – எலிசபெத் அலெக்சாந்தர், பிரித்தானிய நிலவியலாளர், இயற்பியலாளர் (பி. 1908)
👉1961 – சூர்யகாந்த் திரிபாதி, இந்தியக் கவிஞர் (பி. 1896)
👉1987 – தோமசு சங்காரா, புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவர் (பி. 1949)
👉1988 – ஜூலியன் ஆல்பிரட் ஸ்டியர்மார்க், அமெரிக்க தாவரவியலாளர் (பி. 1909)
👉2004 – டி. ஆர். பாப்பா, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1923)
👉2009 – தருமபுரம் ப. சுவாமிநாதன், சைவத் திருமுறை ஓதுவார் (பி. 1923)
👉2009 – தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து, தமிழ் ஆத்திரேலிய எழுத்தாளர் (பி. 1946)
👉2010 – சௌந்தரா கைலாசம், தமிழக எழுத்தாளர் (பி. 1927)
👉2012 – நொரடோம் சீயனூக், கம்போடியாவின் 1வது பிரதமர் (பி. 1922)
👉2018 – பவுல் ஆல்லென், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1953)
இன்றைய தின சிறப்பு நாட்கள்.
👉ஆசிரியர் நாள் (பிரேசில்)
👉வெண்பிரம்பு பாதுகாப்பு நாள் (ஐக்கிய அமெரிக்கா)
👉உலகக் கைகழுவும் நாள்
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.