தும்புத்தடியால் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 தும்புத்தடியால் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழப்பு.

காலியில் சம்பவம் காலி மகா மோதர பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனை அவனது தந்தை தும்புத்தடியால் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

கடந்த புதன்கிழமை சிறுவனின் தந்தை அவனை தும்புத்தடியால் அடித்ததாகக் கூறப்படுகிறது.

 ஒன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாததற்கே தந்தை அடித்துள்ளார். தலையில் அடி காயத்துக்குள்ளான சிறுவன் கராபிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான்.

 சம்பவம் குறித்து காலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறுகையில், “அச்சிறுவன் தாயாரால் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான். 

காரப்பிட்டிய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது சிறுவன் ஆபத்தான நிலையில் இருந்ததுடன் சுயநினைவை இழந்திருந்தான்” என்றார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 49 வயதான தந்தை இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.