பொது போக்குவரத்து தொடர்பாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தது என்ன?
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
பொது போக்குவரத்து தொடர்பாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தது என்ன?
சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறுகின்றனர்.
அதே போன்று சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறுகின்ற பேருந்துகளைக் கண்காணிப்பதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவ்வாறு சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இரண்டு வாரங்களுக்குத் தொடருந்து சேவைகள் கைவிடப்பட்டுள்ளன. தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 108 தொடருந்துகள் சேவைக்குத் தயாராகவுள்ளதாகத் தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் தொடருந்து புதுப்பிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.