இதுவரை 542 சிறுவர்களுக்கு தடுப்பூசி...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இதுவரை 542 சிறுவர்களுக்கு தடுப்பூசி...

கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட ஆயிரத்து 542 சிறுவர்களுக்கு இதுவரை பைஸர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. 

இதன்படி ,நேற்று முன்தினம் 150 சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்துசித்த சேனாபதி தெரிவித்துள்ளார்.

 தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதற்கு https://ift.tt/2ZWqlYF என்ற இணையத்தில் பிரவேசிப்பதன் ஊடாக நேரம், திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும். 

அதேவேளை ,பைசருக்கான பதிவு 12-19 வயதுக்குட்பட்ட மற்றும் குறிப்பிட்ட கொமொர்பிடிட்டிகளுடன் குழந்தைகளுக்கு மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் குழந்தையின் அனைத்து மருத்துவ பதிவுகளையும் கொண்டு வர வேண்டும் என்று கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசி கொடுக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்கு முன்பு அவர்கள் ஒரு ஆலோசகர் குழந்தை மருத்துவரால் மதிப்பீடு செய்யப்படுவார்கள்.


 எனவே தடுப்பூசிக்கு பதிவு செய்வது தடுப்பூசி வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை , மொனராகலை, நுவரெலியா மாவட்டங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நேற்று காலை ஆரம்பமானது. 

மாத்தறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. கேகாலை மாவட்டத்தில் 6 சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி தெரிவித்துள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.