“விண்டோஸ் 11” நேற்று வெளியிடப்பட்டது.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 “விண்டோஸ் 11” நேற்று வெளியிடப்பட்டது.
மைக்ரோசொப்ட் கணினி இயங்குதளத்தின் அண்மைய பதிப்பான “விண்டோஸ் 11” நேற்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது.
மைக்ரோசொப்ட் கணினி இயங்குதளத்தின் அண்மைய பதிப்பான “விண்டோஸ் 11” நேற்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ,விண்டோஸ் 10 பயனர்கள் இந்த புதிய இயங்குதள மென்பொருளை இலவசமாக தரவிறக்கி மேம்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்ரோசொப்ட் அறிவித்துள்ளது.
அது குறித்து விண்டோஸ் மென்பொருள் தலைமை தயாரிப்பு அதிகாரி பனோஸ் பனாய் பேசுகையில், “விண்டோஸ் 11 அண்மைய பதிப்பு பயனருக்கு புதிய மற்றும் எளிமையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.
அந்த புதிய இயங்கு முறை, தற்போதைய பயன்பாட்டு முறையில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டிருக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.
விண்டோஸ் 11 சில குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்களைக் கொண்டுள்ளது, இயல்பாக, ஸ்டார்ட் மெனு டாஸ்க்பாரில் உள்ள ஐகோன்களுடன் திரையில் மையமாக இருக்கும். ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்யும் போது, அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளின் பட்டியல் மெனுவில் தோன்றும்.
இதன்படி ,ஒரு வகையில் இது திறன்பேசி செயலிகளை திறப்பது போன்ற தோற்றத்தை பிரதிபலிக்கிறது. விண்டோஸ் 10இல் காணப்படும் டைல்ஸ்களை 11இல் மைக்ரோசொப்ட் கைவிட்டுள்ளது.
மேலும் ,உங்களுடைய கணிப்பொறியில் போதிய ஸ்டோரேஜ் வசதி, ப்ராசசர் வசதி இருந்தால் உங்களால் விண்டோஸ் 11 இயங்குதள பதிவிறக்க லிங்கை டவுன்லோடு செய்து உங்களுடைய கணிப்பொறி இயங்குதளத்தை எளிதாக மே்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.