நாளை முதல் மதிய உணவுப் பொதி, பால் தேநீர் உள்ளிட்ட சில உணவுகளின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு - அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
நாளை முதல் மதிய உணவுப் பொதி, பால் தேநீர் உள்ளிட்ட சில உணவுகளின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு - அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம்.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாளை முதல் மதிய உணவுப் பொதி, பிரைட் ரைஸ், கொத்துரொட்டி, பால் தேநீர் போன்றவற்றின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

 இதேவேளை தேநீர் ஒன்றின் விலையானது 25 ரூபாவாகவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் தெரிவித்தார்.

 எரிவாயு விலையில் பாரிய அதிகரிப்பையடுத்து மதிய உணவுப் பொதியின் விலையை 30 ரூபாவால் அதிகரிக்க வேண்டும். இருப்பினும் மக்களின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு, அதனை நாம் 10 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். 

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் பெருமளவில் உயர்ந்துள்ளதால், எங்கள் தொழில் வீழ்ச்சியடையும் அபாயத்தில் உள்ளது. ஆகையால் மக்கள் கடைகள் மற்றும் உணவகங்களில் சமைத்த உணவை வாங்குவதைத் தவிர்ப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தை விட ஹோட்டல் உரிமையாளர்கள் மிகவும் மனிதாபிமான முள்ளவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.