மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துங்கள்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துங்கள்.
மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "கொரோனா தொற்று நோய் முடிவடையும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பை துரிதப்படுத்துவது பற்றி நாங்கள் விவாதித்தோம்.
அதன்படி, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம். அதற்காக கட்சியின் அனைத்து பிரிவுகளையும் வலுப்படுத்தும் திட்டம் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.
பொருட்களின் விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன. மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். மக்களின் பிரச்சினைகள், வறுமை நிலை வேகமாக அதிரித்துள்ளது.
இவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும். உடனடியாக தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என நான் நம்பமாட்டேன். உரிய திட்டமிடல் மூலம்தான் இவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என்றார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.