புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது.

 

சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது.
 #அதற்கமைய 

👉வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

👉வீட்டுக்குள் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளக மற்றும் வெளியக விருந்துபசாரங்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

👉திருமண மண்டபங்களில் 50 நபர்களுக்கு மேற்படாத வகையில் அல்லது மண்டப கொள்ளளவில் 25சதவீதமானோரை உள்ளடக்கியதாகத் திருமண வைபவங்களை நடத்த சுகாதார வழிகாட்டியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

👉மரண சடங்குகளில் கலந்துகொள்ள ஒரே தடவையில் 20 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

👉சமய ஸ்தலங்கள், கூட்டு வழிபாடு மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. 

👉பாடசாலைகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

👉கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கு அமைய 200க்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை முதல் கட்டமாகத் திறக்க முடியும். 

👉பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களை சுகாதார வழிகாட்டலுக்கு அமைய ஆரம்பிக்க முடியும். 

👉முன்பள்ளிகளை 50சதவீத மாணவர் கொள்ளளவை கொண்டு முன்னெடுக்க முடியும். 

👉பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

👉பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக அனுமதிக்கப்படுவதுடன், பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் அவை இயங்க வேண்டும். 

👉திறந்த சந்தைகள் மற்றும் வாராந்த சந்தைகள் என்பனவும் பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் இயங்க வேண்டும். 

👉உணவகங்களில் உணவு விநியோகத்திற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

👉நடமாடும் வர்த்தகங்கள் பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் இயங்க வேண்டும். 

👉வர்த்தக நிலையங்கள், சில்லறை வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், சிறப்பு அங்காடிகள் மற்றும் வீட்டுப் பொருள் விற்பனை நிலையங்கள் என்பனவற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் மொத்த கொள்ளளவில் 20 சதவீதமானோருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட வேண்டும். 

👉குறித்த இடங்களில் அனுமதிக்ககூடிய நபர்களின் எண்ணிக்கை வெளியே காட்சிப்படுத்தப்பட வேண்டும். 

👉வங்கிகள், நிதிநிறுவனங்கள், அடகு பிடிப்பு நிலையங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் 5 பேரை மாத்திரம் அனுமதிக்க முடியும் என்பதுடன் ஏனையோர் குறித்த இடங்களுக்கு வெளியே சமூக இடைவெளியை பேணியவாறு வரிசையில் நிற்க முடியும். 

👉கட்டுமாண தளங்களின் பணிகளை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்க முடியும். 

👉விவசாய நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

👉சிகையலங்கார நிலையம், அழகுக்கலை நிலையங்களில் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்க முடியும். 

👉திரையரங்குகளில் ஒரு சந்தர்ப்பத்தில் மொத்த கொள்ளளவில் 25 சதவீதமானோருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.