அனைத்து அரிசி வகைகளும் கிலோ ஒன்று 25-50 ரூபா வரை உயரும் சாத்தியம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
அனைத்து அரிசி வகைகளும் கிலோ ஒன்று 25-50 ரூபா வரை உயரும் சாத்தியம்.
எதிர்வரும் 14 நாட்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 25 முதல் 50 ரூபா வரை அதிகரிக்கப்படும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 14 நாட்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 25 முதல் 50 ரூபா வரை அதிகரிக்கப்படும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எனவே, அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் உடனடியாக வர்த்தமானியில் அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலனறுவையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தத் தொழிற்சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
தற்போதைய உர நெருக்கடியால், பெரும் போகத்தில் மொத்த நெல் உற்பத்தியில் நூற்றுக்கு 50% குறைந்துள்ளது. இதனால் நாட்டில் பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலை காரணமாக எதிர்காலத்தில் அனைத்து அரிசி வகைகளின் ஒரு கிலோவிற்கான விலை நுகர்வோர் எதிர்கொள்ள முடியாத வகையில் அதிகரிக்கும் என்று சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் நெல்லை அதிக விலைக்கு வாங்குவதால் அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அரிசியின் கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நீக்கி சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.