மின் கட்டண சலுகை தொடர்பான அறிவிப்பு.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
நாட்டில் நிலவி வரும் கொவிட் வைரஸ் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா விடுதிகளின், மின்சார கட்டணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை மேலும் குறுகிய காலத்திற்கு நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மின்சக்தி அமைச்சருடன் கலந்துரையாட இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் வைரஸ் தொற்று பரவல் காரணமாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கான சலுகை காலம் வழங்கப்பட்டிருந்தது.
கால அவகாசம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது. வீழ்ச்சி அடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம், அதனால் இந்த சலுகையை மேலும் நீடித்து தருமாறு சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, சுற்றுலா விடுதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அந்த சலுகையை மேலும் குறுகிய காலத்திற்கு நீடிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.