அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் வெளிப்படையாக போராட தீர்மானம் - 29 ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் வெளிப்படையாக போராட தீர்மானம் - 29 ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கெரவலபிட்டிய யுகதானவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றியமை குறித்து கலந் துரை யாடல் ஒன்றை நடத்த அரசாங்க அதிகாரிகள் அனுமதி வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழங்கியமைகுறித்து கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் மறுப்பு தெரி வித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளன. 

மக்கள் சபை என்ற பெயரில் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தெரிவித்துள்ளன கெரவலபிட்டிய யுகதனவ் மின்நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கு வதனை கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பத்து கட்சிகள் இந்த உடன்படிக்கையை எதிர்த்து பகிரங்க கூட்ட மொன்றை நடாத்தத் தீர்மானித்துள்ளன. டிரான் அலஸ் இல்லத்தில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிடவும் தீர்மானித்துள்ளனர்.

 பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , அமைச் சர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, எல்.எம். அதாவுல்லா , அசங்க நவரத்ன , டிரான் அலஸ் , கெவிந்து குமாரதுங்க, , வீரசுமன வீரசிங்க, கம்யூனிஸ்ட் கட்சி பிரதான செய லாளர் வைத்தியர் வீரசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் டியூ.குணசேகர ஆகியோர் கலந்துகொண்ட கலந் துரையாடல் சுமார் ஐந்து மணி நேரம் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

 குறித்த உடன்படிக்கை தொடர்பாக கலந்துரையாட ஜனா திபதியிடம் திகதி திகதியொன்றை கோரி அரசாங் கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கடிதமொன்றை அனுப்பியிருந்தன ஆனால் அது தொடர்பாக ஜனாதிபதி எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை என தெரிய வந்துள்ளது. 

இந்த உடன்படிக்கையை எதிர்த்து ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் கூட்டு அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிட உள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.