இலங்கை இன்னும் கொவிட் -19 தொற்று நோயிலிருந்து விடுபடவில்லை - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இலங்கை இன்னும் கொவிட் -19 தொற்று நோயிலிருந்து விடுபடவில்லை - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.

இலங்கை கொரோனா தொற்றிலிருந்து விடுபடவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றத் தவறினால் ஏற்படும் பின்விளைவுகளை எதிர்வரும் நாட்களில் அனுபவிக்க நேரிடும் என அச்சங்கத்தின் உதவிச் செயலாளரான வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்தார். 

ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 200 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தடுப்பூசிகள் மூலம் உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது, குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு.

 நிலைமையை எதிர்கொள்ள பூஸ்டர் டோஸ் வழங்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமூக இடைவெளி, முகக்கவசங்களை அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பொது மக்கள் குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது கடைப்பிடிக்க வேண்டும். கொவிட்-19 தொற்றுநோயைக் கையாளும் போது பாடசாலைகள் மற்றும் பல்கலைக் கழகங்களை தொடர்ந்து மூடுவது ஒரு தீர்வாகாது.

 தடுப்பூசியைத் தொடர்ந்து சில நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம். இருப்பினும் சுகாதார வழிகாட்டல்களைப் புறக்கணித்தால் சிக்கல்கள் ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.