வரலாற்றில் இன்று நவம்பர் 06.11

 வரலாற்றில் இன்று நவம்பர் 06.11


நவம்பர் 6  கிரிகோரியன் ஆண்டின் 310 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 311 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 55 நாட்கள் உள்ளன.

 

இன்றைய தின நிகழ்வுகள்.


👉447 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் தாக்கியதில் 57 கோபுரங்கள் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்தன.

 👉963 – திருத்தந்தை பன்னிரண்டாம் ஜான் புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

👉1528 – எசுப்பானிய வெற்றியாளர் ஆல்வர் நூனெசு கபீசா டெ வாக்கா கப்பல் மூழ்கிய நிலையில் டெக்சசில் கால்பதித்த முதல் ஐரோப்பியர் என்ற பெயரைப் பெற்றார்.

👉1632 – முப்பதாண்டுப் போரில் சுவீடன் பேரரசர் குசுடாவசு அடொல்பசு கொல்லப்பட்டார்.

👉1759 – பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.

👉1789 – அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்க ஆயராக ஜான் கரோல் திருத்தந்தை ஆறாம் பயசினால் நியமிக்கப்பட்டார்.

👉1844 – டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது.

👉1860 – ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அரசுத்தலைவர் ஆவார்.

👉1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்குத் தலைவரானார்.

👉1891 – “சிலோன் ஸ்டீம்ஷிப்” நிறுவனத்துக்குச் சொந்தமான நீராவிக் கப்பல் “லேடி ஹவ்லொக்” முதன் முறையாக கொழும்பு வந்தடைந்தது.

👉1913 – தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.

👉1917 – முதலாம் உலகப் போர்: மூன்று மாதங்கள் தொடர்ச்சியான சண்டையை அடுத்து, கனடியப் படைகள் பெல்ஜியத்தின் பாசன்டேல் நகரைக் கைப்பற்றின.

👉1917 – அக்டோபர் புரட்சி: பெத்ரோகிராது நகரில் உருசியப் படைகளுக்கும் போல்செவிக்கினருக்கும் இடையில் சமர் இடம்பெற்றது.

👉1918 – போலந்தில் இடைக்கால பக்கள் அரசு அமைக்கப்பட்டது.

👉1935 – எட்வின் ஆர்ம்சுட்ராங் பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.

👉1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தனது முப்பதாண்டு கால பதவியில் இரண்டாவது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செருமனியின் தாக்குதலில் 350,000 சோவியத் வீரர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், செருமனியர் தமது 4.5 மில்லியன் பேரை இழந்திருப்பதாகவும் சோவியத் வெற்றி கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

👉1943 – இரண்டாம் உலகப் போர்: சோவியத்தின் செஞ்சேனைப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவைக் கைப்பற்றின. செருமனியினர் நகரை விட்டு விலகும் போது நகரின் பல பகுதிகளை சேதமாக்கினர்.

👉1943 – இந்தியாவின் வங்காளத்தில் “நவகாளி”யில் இடம்பெற்ற இந்து-முசுலிம் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்து நவகாளி வந்து சேர்ந்தார்.

👉1944 – புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் சப்பான், நாகசாகியில் அணுகுண்டு போடுவதற்கு இது பயன்பட்டது.

👉1962 – ஐநா பொதுச்சபை தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

👉1963 – வியட்நாம் போர்: நவம்பர் 1 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து, இராணுவத் தலைவர் டோங் வான் மின் தெற்கு வியட்நாமின் தலைவரானார்.

👉1965 – ஐக்கிய அமெரிக்காவுக்கு குடியேற விரும்பிய கியூபா நாட்டினரை விமானம் மூலம் அங்கு கொண்டு செல்ல கியூபாவும் ஐக்கிய அமெரிக்காவும் உடன்பட்டன. இதன்படி 1971இற்குள் 250,000 கியூபர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

👉1971 – அமெரிக்கா கன்னிக்கின் என்ற குறியீட்டுப் பெயருடைய நிலத்தடி ஐதரசன் குண்டை அலூசியன் தீவுகளில் சோதித்தது.

👉1977 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

👉1985 – கொலம்பியா, பொகோட்டா நகரில் இடதுசாரி தீவிரவாதிகள் நீதிக் கட்டிடத்தைக் கைப்பற்றி 11 நீதிபதிகள் உட்பட 115 பேரைக் கொன்றனர்.

👉1986 – இசுக்காட்லாந்தில் பிரித்தானிய சி.எச்.-47 சினூக் உலங்குவானூர்தி சம்பரோ வானூர்தி நிலையத்துக்கு அருகில் வீழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.

👉1999 – ஆத்திரேலியாவில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் தொடர்ந்திருக்க பெரும்பான்மையானோர் சம்மதம் தெரிவித்தனர்.

👉2004 – இங்கிலாந்தில், விரைவுத் தொடருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் மோதியதில் ஏழு பேர் உயிரிழந்தனர், 150 பேர் காயமடைந்தனர்.

👉2013 – தையுவான் நகரில் சீனப் பொதுவுடமைக் கட்சி அலுவலகத்தில் குண்டுகள் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார், 8 பேர் காயமடைந்தனர்.


இன்றைய தின பிறப்புகள்.


👉1494 – முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (இ. 1566)

👉1661 – எசுப்பானியாவின் இரண்டாம் சார்லசு (இ. 1700)

👉1814 – அடோல்ப் சக்ஸ், சாக்சபோனைக் கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1894)

👉1861 – ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்தாட்டத்தைக் கண்டுபிடித்த கனடிய-அமெரிக்கர் (இ. 1939)

👉1884 – இலீகு பிரவுன் ஆலன், அமெரிக்க வானியலாளர் (இ. 1973)

👉1886 – ஈதா பார்னி, அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1982)

👉1926 – டி. ஆர். மகாலிங்கம், புல்லாங்குழல் கலைஞர் (இ. 1986)

👉1932 – பிரான்சுவா எங்கிலேர், நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய இயற்பியலாளர்

👉1937 – யஷ்வந்த் சின்கா, இந்திய அரசியல்வாதி

👉1940 – சூலமங்கலம் ராஜலட்சுமி, கருநாடக இசைப் பாடகி, திரைப்படப் பின்னனிப் பாடகி (இ. 1992)

👉1950 – நிமலன் சௌந்தரநாயகம், இலங்கை அரசியல்வாதி (இ. 2000)

👉1963 – யோகனேசு சூர்யா, இந்தோனேசிய இயற்பியலாளர்

👉1968 – ஜெர்ரி யாங், தாய்வான் அமெரிக்கத் தொழிலதிபர்

👉1972 – ரெபேக்கா ரோமெயின், அமெரிக்க நடிகை

👉1983 – நீலிமா ராணி, தமிழ்த் திரைப்பட, சின்னத்திரை நடிகை

👉1987 – ஆனா இவனோவிச், செர்பிய டென்னிசு வீராங்கனை

👉1988 – எம்மா ஸ்டோன், அமெரிக்க நடிகை


இன்றைய தின இறப்புகள்.


👉1406 – ஏழாம் இன்னசெண்ட் (திருத்தந்தை) (பி. 1339)

👉1632 – சுவீடனின் கஸ்டாவஸ் அடால்பஸ் (பி. 1594)

👉1872 – ஜார்ஜ் கார்டன் மீடு, அமெரிக்கப் பொறியியலாளர், அமெரிக்கத் தரைப்படை அதிகாரி (பி. 1815)

👉1893 – பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி, உருசிய இசையமைப்பாளர் (பி. 1840)

👉1985 – சஞ்சீவ் குமார், இந்திய நடிகர் (பி. 1938)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉ஒபாமா நாள் (கென்யா)

👉மர நாள் (கொங்கோ குடியரசு)

👉போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.