வரலாற்றில் இன்று நவம்பர் 09.11
வரலாற்றில் இன்று நவம்பர் 09.11
நவம்பர் 9 கிரிகோரியன் ஆண்டின் 313 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 314 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 52 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்.
👉1277 – அபெர்கொன்வி உடன்பாடு உவெல்சியப் போர்களின் முதலாவது கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
👉1520 – ஸ்டாக்ஹோம் நகரில் இரண்டாம் கிறித்தியான் மன்னருக்கு எதிராக செயற்பட்ட 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
👉1688 – மாண்புமிகு புரட்சி: ஆரஞ்சின் வில்லியம் எக்செட்டர் நகரைக் கைப்பற்றினான்.
👉1720 – எருசலேமில் யூதர்களின் தொழுகைக் கூடம் ஒன்று முசுலிம்களால் தீயிட்டு அழிக்கப்பட்டது. அசுகனாசிம்கள் எருசலேமில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
👉1793 – கிறித்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.
👉1799 – பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
👉1867 – சப்பானின் கடைசி இராணுவ ஆட்சியாளர் ஆட்சியை சப்பானியப் பேரரசரிடம் ஒப்படைத்தனர். மெய்சி மீள்விப்பு ஆரம்பமானது.
👉1872 – மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் களஞ்சிய சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் பொஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது. 776 கட்டடங்கள் அழிந்து 20 பேர் உயிரிழந்தனர்.
👉1887 – ஐக்கிய அமெரிக்கா அவாயின் பேர்ள் துறைமுகத்தின் உரிமையைப் பெற்றது.
👉1888 – கிழிப்பர் ஜேக் மேரி ஜேன் கெலியைக் கொன்றான். இதுவே அவனது கடைசிக் கொலையாகும்.
👉1906 – அதிகாரபூர்வமாக வெளிநாட்டுக்குச் சென்ற முதலாவது அமெரிக்க அரசுத்தலைவராக தியொடோர் ரோசவெல்ட் பனாமா கால்வாயை பார்க்கச் சென்றார்.
👉1907 – கலினன் வைரம் இங்கிலாந்தின் ஏழாம் எட்வர்டு மன்னருக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு பரிசளிக்கப்பட்டது.
👉1913 – மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.
👉1914 – செருமனியின் எம்டன் கப்பல் கொக்கோசு தீவுகளில் இடம்பெற்ற போரில் ஆத்திரேலியாவின் சிட்னி கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
👉1918 – செருமனியப் புரட்சியை அடுத்து இரண்டாம் வில்லியம் முடி துறந்தார். செருமனி குடியரசானது.
👉1921 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
👉1923 – செருமனி, மியூனிக்கில், நாட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை காவல்துறையினர் முறியடித்தனர்.
👉1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீன இராணுவம் சாங்காய் நகரில் இருந்து வெளியேறின.
👉1938 – நாட்சி செருமனியின் இட்லரின் யூதப் பகைமைக் கொள்கையின் ஒரு பகுதியாக செருமனியில் கிறிஸ்டல் இரவு நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25,000 பேர் கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
👉1953 – கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
👉1963 – சப்பானில் மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் உயிரிழந்தனர்.
👉1965 – கத்தோலிக்க உழைப்பாளர் இயக்கத்தைச் சேர்ந்த ராஜர் அல்லன் என்பவர் வியட்நாம் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய நாடுகள் அவைக்கு முன்னால் தீக்குளித்து மாண்டார்.
👉1967 – அப்பல்லோ திட்டம்: நாசா அப்பல்லோ 4 ஆளில்லா விண்கலத்தை ஏவியது.
👉1985 – சதுரங்க உலகக்கிண்ணப் போட்டியில் காரி காஸ்பரொவ் அனத்தோலி கார்ப்பொவைத் தோற்கடித்து உலகின் முதலாவது வயது குறைந்த (22) சதுரங்க வாகையாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
👉1989 – பனிப்போர்: கம்யூனிசக் கிழக்கு செருமனி பெர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு ஜெர்மனிக்குள் செல்ல ஆரம்பித்தனர்.
👉1990 – நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
👉1994 – டார்ம்சிட்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
👉2000 – உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
👉2005 – வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஐரோப்பாவின் விண்கலம் கசக்கஸ்தான், பைக்கனூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.
👉2005 – யோர்தான், அம்மான் நகரில் மூன்று விடுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
👉2012 – வடக்கு மியான்மரில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.
👉2012 – கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் காவலர்கள், மற்றும் கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.